மதுரை, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் 23 ஆண்டுகளுக்கு பின்பு அத்தொகுதியை தி.மு.க., வசப்படுத்தி உள்ளது.இத்தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று மாலை முடிவடைந்தது. அதில் 2 ஆயிரத்து 394 ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க., வேட்பாளர் சரவணன் வெற்றி பெற்றார்.1989 ல் அ.தி.மு.க., இரண்டாய் பிளவுபட்டிருந்தபோது நடந்த தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் ராமச்சந்திரன் வென்றார். அடுத்த தேர்தலிலும் வெற்றி வாய்ப்பு அவருக்கே கிடைத்தது. ஆனால் அதற்கு பிறகு நடந்த எந்த தேர்தலிலும் திருப்பரங்குன்றத்தில் தி.மு.க., வெல்லவில்லை. தொடர்ந்து 23 ஆண்டுகளாக அ.தி.மு.க.,வின் கோட்டையாக இத்தொகுதி விளங்கியது. இதை அ.தி.மு.க.,வினரும் பெருமையாக கூறிவந்த நிலையில், மீண்டும் தி.மு.க., இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
வாசகர் கருத்து