ஸ்டாலின் யுக்திக்கு கிடைத்த வெற்றியா

சென்னை, தேர்தல் முடிவுகள் தி.மு.க., வுக்கு பெரும் வெற்றியை தந்தாலும் இது ஸ்டாலின் யுக்திக்கு கிடைத்த வெற்றியா என்பது விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதி மறைந்த பின் அவரது மகன் ஸ்டாலின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவரது தலைமையின் கீழ் முதல் லோக்சபா தேர்தலை தி.மு.க., சந்தித்துள்ளது. சந்தேகம்அதேபோல 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலும் தி.மு.க., வுக்கு சாதகமாக தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பாக பார்க்கப்பட்டது. இதில் ஸ்டாலினின் தேர்தல் யுக்தி எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. கட்சித் தலைவராக கருணாநிதி இருந்தபோது ஸ்டாலின் எடுத்த கூட்டணி முடிவுகள் பெரும் வெற்றி பெறவில்லை.அதனால் கருணாநிதி இல்லாமல் ஸ்டாலின் எடுக்கும் முடிவுகள் எப்படியிருக்குமோ என தி.மு.க.,வின் மூத்த தலைவர்களே சந்தேகத்தில் இருந்தனர். அங்கீகாரம்அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் லோக்சபா தேர்தலில் தி.மு.க., அமோக வெற்றி பெற்றுள்ளது. இதை ஸ்டாலின் தலைமைக்கு கிடைத்த வெற்றியாகவும் அங்கீகாரமாகவும் கட்சியினர் பார்க்கின்றனர்.ஆனால் தமிழகத்தில் தி.மு.க. மட்டும் வெற்றி பெற்றிருந்தால் ஸ்டாலின் தலைமைக்கும் தி.மு.க., வுக்கும் கிடைத்த வெற்றியாக பார்க்கலாம். மாறாக தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கும் தமிழகத்தில் மிகப் பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது.அதனால் இந்த வெற்றி அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., அணிக்கு எதிரான அலையாகவே பார்க்கப்படுகிறது.தி.மு.க. மட்டுமே வெற்றி பெற்றிருந்தால் இது தி.மு.க., வுக்கான மக்களின் ஆதரவு என எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்று அ.தி.மு.க. வுக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது. எனவே இது அ.தி.மு.க., எதிர்ப்பு அலை என்றே பார்க்கப்படுகிறது.அதேநேரம் கூட்டணி தொடர்பான முடிவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு வெற்றிகளை பெற்றபோதும் அதனால் மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரத்தை பிடிக்க எந்த பயனும் இல்லாமல் போனதே என தி.மு.க. வினர் கவலையில் உள்ளனர்.தேர்தல் முடிந்ததும் மத்தியில் ராகுல் தான் பிரதமர் என தேசிய அளவில் ஸ்டாலின் தான் முன்மொழிந்தார். இந்த உறுதிமொழிக்கு தி.மு.க., வின் வெற்றி சிறிதளவும் வலு சேர்க்காமல் போய் விட்டது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)