பொய்த்து போனது குமரி 'சென்டிமென்ட்'

நாகர்கோவில்: கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே மத்தியில் ஆட்சியமைக்கும் என்ற 'சென்டிமென்ட்' இம்முறை பொய்த்து போனது.

கன்னியாகுமரி சட்டசபை மற்றும் லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சிகளே மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சியமைக்கும் என்ற 'சென்டிமென்ட்' இருந்து வந்தது. இது 2016 சட்டசபை தேர்தலில் உடைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை 2016ல் இம்மாவட்டத்தின் ஆறு சட்டசபைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றாலும் மாநிலத்தில் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது.

கன்னியாகுமரி லோக்சபா தொகுதி விஷயத்திலும் இதற்கு முன் இங்கு வெற்றி பெறும் கட்சி அல்லது அது இடம்பெறும் கூட்டணியே மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது . 2014ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ. வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் இத்தொகுதியில் வெற்றி பெற்றதுடன் மத்தியிலும் பா.ஜ. ஆட்சி அமைத்தது. தற்போது 2019 லோக்சபா தேர்தலில் தேசிய அளவில் பா.ஜ. வெற்றி பெற்ற போதும் கன்னியாகுமரி பா.ஜ. வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் தோல்வியை தழுவியுள்ளார்.

சட்டசபை தேர்தல் 'சென்டிமென்ட்' 2016ம் ஆண்டு தேர்தலில் நீர்த்துப் போனதை போன்று லோக்சபா தேர்தல் சென்டிமென்டும் 2019ம் ஆண்டு தேர்தலில் காணாமல் போனது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)