மம்தா ராஜ்ஜியத்துக்கு சோதனைஇடதுசாரி கூட்டணிக்கு தோல்வியே பரிசு

கோல்கட்டா,திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் கோட்டையான, மேற்கு வங்கத்தில், பா.ஜ., தன் ஆட்டத்தை துவங்கியுள்ளது. இங்கு, ஒரு காலத்தில், பெரும் செல்வாக்குடன் விளங்கிய, மார்க்சிஸ்ட் கட்சி, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.மேற்கு வங்கம், 30 ஆண்டுகளாக, மார்க்சிஸ்ட் கட்சியின் கோட்டையாக விளங்கியது. ஜோதிபாசு, புத்ததேவ் பட்டாச்சார்யா போன்ற செல்வாக்கு மிக்க மார்க்சிஸ்ட் தலைவர்களை தாண்டி, அங்கு, காங்கிரசால், வெற்றிக்கொடி நாட்ட முடியவில்லை.இந்நிலையில் தான், காங்கிரசில் இருந்து வெளியேறி, திரிணமுல் காங்கிரஸ் கட்சியை துவக்கிய மம்தா, மார்க்சிஸ்ட் கோட்டையை தகர்த்தார். கடந்த இரு தேர்தல்களில், அவரது வெற்றிப் பயணத்தை, யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.ஆனால், இந்த தேர்தலில், மம்தா கட்சிக்கு, பா.ஜ., பெரும் சவாலாக விளங்கியது. மேற்கு வங்கத்தில், பா.ஜ.,வுக்கு திடீரென மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளதை பார்த்து, கலக்கம் அடைந்த மம்தா, அவர்களது பிரசாரத்துக்கு, போலீசார் மூலம், பல்வேறு தடைகளை ஏற்படுத்தினார். அவ்வளவு தடைகளையும் முறியடித்து, பா.ஜ., தன் அடையாளத்தை, அழுத்தமாக பதித்துள்ளது.கடந்த லோக்சபா தேர்தலில், இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற, பா.ஜ. தற்போது, 18 தொகுதிகளில் வெற்றி பெற்று, மம்தாவுக்கு ஆட்டம் காட்டிஉள்ளது. கடந்த தேர்தலில், 33 தொகுதிகளில் வெற்றி பெற்ற, திரிணமுல் காங்கிரஸ், தற்போது, 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.ஒரு காலத்தில், மேற்கு வங்கத்தை கட்டி ஆண்ட, மார்க்சிஸ்ட் கட்சி, தற்போது, ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறவில்லை.பிரதமர் மோடிக்கு, மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட திடீர் செல்வாக்கு, மம்தாவின் சர்வாதிகார போக்கால் ஏற்பட்ட வெறுப்பு, இடதுசாரி கட்சியினர், மம்தா மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்துவதற்காக, தங்கள் கட்சிக்கு ஓட்டளிக்காமல், பா.ஜ.,வுக்கு ஆதரவு அளித்தது போன்றவை, இங்கு, பா.ஜ., அபார வெற்றி பெற்றதற்கு, முக்கிய காரணமாக கூறப்படுகிறது.'மேற்கு வங்கத்தில், இனி, பா.ஜ.,வின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவது, மம்தாவுக்கு, பெரும் சவாலாகவே இருக்கும்' என்கின்றனர், அரசியல் பார்வையாளர்கள்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)