பஞ்சாபில் பா.ஜ., அலையில் தப்பிய காங்.,

சண்டிகர், மே 24-லோக்சபா தேர்தலில், நாடு முழுவதும், பா.ஜ., அலை வீசிய போதும், பஞ்சாப் மாநிலத்தில், தன் ஆதிக்கத்தை, காங்., தக்க வைத்துக் கொண்டுள்ளது. இங்குள்ள, 13 தொகுதிகளில், எட்டு தொகுதிகளை, காங்., கைப்பற்றியுள்ளது. இரண்டு தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது.பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், 25 ஆண்டுக்கும் மேலாக, அகாலி தளம் - பா.ஜ., கூட்டணி அமைத்துள்ளது.முந்தைய, 2014 லோக்சபா தேர்தலில், மோடி அலை வீசிய போதிலும், பஞ்சாபில், பா.ஜ., கூட்டணியில், எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. இதற்கு, அப்போது, மாநிலத்தில் இருந்த, அகாலி தளம் ஆட்சியின் மீது, மக்களுக்கு இருந்த அதிருப்தியே காரணம் என, கூறப்பட்டது.இது, 2017ல் நடந்த, சட்டசபை தேர்தலில் உண்மையானது. மொத்தம் உள்ள, 117 தொகுதிகளில், காங்கிரஸ், 77 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றியது. அமரீந்தர் சிங், முதல்வராக பதவியேற்றார். காங்கிரஸ் வெற்றிக்கு, அமரீந்தர் சிங்கின் தனிப்பட்ட செல்வாக்கும், காரணமாக கூறப்பட்டது.சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி, 20 இடங்களில் வென்று, இரண்டாம் இடம் பிடித்தது. இதனால், லோக்சபா தேர்தலில், டில்லிக்கு அடுத்தபடியாக, பஞ்சாபில், ஆம் ஆத்மி கட்சி அதிக கவனம் செலுத்தியது.மாநிலத்தில், முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும், மாநில அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், அடிக்கடி ஏற்பட்ட மோதல்கள், காங்.,வெற்றியை பாதிக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில், லோக்சபா தேர்தலில், பெரும்பாலான மாநிலங்களில் வீசிய, பா.ஜ., அலையில், காங்., காணாமல் போயுள்ளது. எனினும், பஞ்சாபில், காங்., தன் ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மொத்தம் உள்ள, 13 தொகுதிகளில், எட்டு இடங்களை, காங்., கைப்பற்றி உள்ளது. பா.ஜ., மற்றும் அகாலி தளம், தலா, இரண்டு தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி, ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.குர்தாஸ்பூர் தொகுதியில், பா.ஜ., சார்பில் போட்டியிட்ட, நடிகர் சன்னி தியோல், வெற்றி பெற்றார். அகாலி தளம் சார்பில், மத்திய அமைச்சர் கவுர், முன்னாள் துணை முதல்வர், சுக்பீர் சிங் பாதல், காங்., மூத்த தலைவர் மணீஷ் திவாரி ஆகியோர் வெற்றி பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.ஆம் ஆத்மி சார்பில், பகவத் சிங் மான் வெற்றி பெற்றார். லோக்சபா தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளரும் இவர் தான்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)