ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சி 'அவுட்'

ஜம்மு,ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பா.ஜ., மற்றும் தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை, தலா, மூன்று தொகுதிகளை கைப்பற்றியுள்ளன.
ஜம்மு - காஷ்மீரில், ஜனாதிபதி ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த சட்டசபை தேர்தலுக்கு பின், மக்கள் ஜனநாயக கட்சியும், பா.ஜ.,வும் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. ஆனால், கருத்து வேறுபாட்டால், மக்கள் ஜனநாயக கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை, பா.ஜ., வாபஸ் பெற்றதால், ஆட்சி கவிழ்ந்தது.இதையடுத்து, மூன்று கட்சிகளுமே, லோக்சபா தேர்தலில், தனித்தனியாக போட்டியிட்டன. காங்கிரசும் போட்டியிட்டது. இதில், பா.ஜ., - தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை, தலா, மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.மெஹபூபா முப்தியின், மக்கள் ஜனநாயக கட்சி, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. பயங்கரவாதத்துக்கு எதிராக, மத்தியில் அமைந்துள்ள, பா.ஜ., அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அந்த கட்சிக்கு, மூன்று தொகுதிகளில், மக்கள், வெற்றியை தேடித் தந்துள்ளதாக, அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.லோக்சபா தேர்தல் முடிவுகள், ஜம்மு - காஷ்மீரில் அடுத்து நடக்கவுள்ள சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாகவும், மாநில அரசியலிலும் மாற்றம் ஏற்படும் என்றும், அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)