'குமாரசாமி வெள்ளி வரை தான் முதல்வர்' : பா.ஜ., அதிரடி

பெங்களூரு : கர்நாடகாவில் வெள்ளிக்கிழமை காலை வரை தான் முதலமைச்சர் குமாரசாமி பதவியில் இருப்பார் என்று மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தில் புதிய அரசை அமைக்க பாஜக முழு அளவில் தயார் நிலையில் உள்ளது என்றார். முதலமைச்சராக இருக்கும் குமாரசாமி, வெள்ளிக்கிழமை காலை வரை தான் பதவியில் இருப்பார் என்றும், அவரால் இரவு தூங்கவே முடியாது எனவும் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணியில் பிளவு ஏற்படுவது நிச்சயம் என்றும் சதானந்த கவுடா கூறினார். கர்நாடகாவில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துப் கணிப்பில் பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் அக்கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)