கருத்து கணிப்பை நம்பாதே: ராகுல்

புதுடில்லி : போலியாக வெளியிடப்பட்டுள்ள கருத்துகணிப்புக்களை நம்பி அதிருப்தி அடைய வேண்டாம். அடுத்த 24 மணிநேரத்திற்கு கவனத்துடன் இருக்க வேண்டும் என கட்சி தொண்டர்களை காங்.,தலைவர் ராகுல் கேட்டுக் கொண்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் முடிவுகளை அறிய உலகமே ஆவலாக காத்திருக்கும் நிலையில் கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து, இந்தியில் ராகுல் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காங்., தொண்டர்களே...அடுத்த 24 மணி நேரம் முக்கியமானது. மிகவும் கவனமாக இருங்கள். நீங்கள் உண்மைக்காக போராடுவதால் எதைப் பற்றியும் கவலை கொள்ள வேண்டாம்.
போலியாக வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புக்களை நம்பி சேர்ந்து, அதிருப்தி அடைந்து விடாதீர்கள். உங்களையும், காங்., கட்சியையும் நம்புங்கள். காங் மற்றும் உங்களின் கடின உழைப்பு தோற்றுப் போகாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)