புதுடில்லி : விவிபேட் ஓட்டுகளை எண்ணிய பிறகு மற்ற ஓட்டுகளை எண்ண வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.
7 கட்டங்களாக நடத்தப்பட்ட லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் நாளை (மே 23) எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்களை எண்ண துவங்குவதற்கு முன் ஒப்புகைச்சசீட்டு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்களை எண்ண வேண்டும் என தேர்தல் கமிஷனிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.
இந்த கோரிக்கை தொடர்பாக தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியது. ஒருவேளை எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் கமிஷன் ஏற்றிருந்தால், ஓட்டு எண்ணிக்கை துவங்குவதற்கே பிற்பகல் ஆகலாம் எனவும், முன்னிலை நிலவரம் வெளியாக மாலை ஆகலாம் எனவும் தேர்தல் கமிஷன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.ஒப்புகை சீட்டு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்ட பிறகே தபால் ஓட்டுக்கள் எண்ணப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஓட்டு எண்ணிக்கை நடைமுறை தாமதமானால் முழுமையான தேர்தல் முடிவுகள் விபரம் வெளியாக 2 முதல் 3 நாட்கள் வரை ஆகலாம் எனவும் கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் தாமதமானால் அதுவும் ஆளும் கட்சிக்கு சாதகமாக அமைந்து விட வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் கலக்கத்தில் இருந்தன
நிராகரிப்பு:
இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரித்தது. வழக்கம்போலவே ஓட்டுகள் எண்ணப்படும் என்று கமிஷன் அறிவித்துள்ளது..
வாசகர் கருத்து