தே.மு.தி.க., நிர்வாகிகளை அழைத்து, அக்கட்சி தலைவர், விஜயகாந்த், இரண்டு நாட்கள் விசாரணை நடத்தி உள்ளார்.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இணைந்து, லோக்சபா தேர்தலை, தே.மு.தி.க., சந்தித்தது. கள்ளக்குறிச்சி, வடசென்னை, விருதுநகர், திருச்சி ஆகிய, நான்கு தொகுதிகளில் போட்டியிட்டது. தே.மு.தி.க., வேட்பாளர்கள், கூட்டணி கட்சியினரை கவனிக்கவில்லை. இதனால், அ.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர், தே.மு.தி.க.,விற்கு முறையாக தேர்தல் பணி செய்யவில்லை. ஓட்டுப்பதிவிற்கு பின் வெளியாகியுள்ள கருத்து கணிப்புகளில், தே.மு.தி.க., வெற்றி குறித்து, எந்த தகவலும் இல்லை.எனவே, தேர்தல் தோல்வி தொடருமா என்ற அச்சத்தில், அக்கட்சி மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் உள்ளனர்.இதையடுத்து, இரண்டு நாட்களாக, மாவட்ட செயலர்களை அழைத்து, தேர்தல் பணியில், கூட்டணி கட்சியினர் பங்களிப்பு குறித்து, விஜயகாந்த் விசாரித்துள்ளார். இது தொடர்பாக, மாவட்ட செயலர்கள் கூறிய புகார்களை, தன் மொபைல் போனில், உதவியாளர் வாயிலாக, விஜயகாந்த் பதிவு செய்துள்ளார். - நமது நிருபர் -
வாசகர் கருத்து