சந்திரபாபு சந்திப்புகளில் பின்னடைவு?

புதுடில்லி : நாட்டில் இறுதி கட்ட தேர்தல்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், அரசியல் தலைவர்களை சந்திப்பதில் தீவிரமும் வேகமும் காட்டி வருகிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. சிலரை மீண்டும் சந்திப்பதால், அவரது முயற்சிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்தியாவில் லோக்சபா தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் மே 23 அன்று ஓட்டு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில், கடந்த 2 நாட்களாகவே சந்திரபாபு நாயுடு அரசியல் கட்சி தலைவர்களை சந்திப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.

ராகுல் சந்திப்புகடந்த 2 தினங்களில் மட்டும், காங்கிரஸ் தலைவர் ராகுலை 2 முறை சந்தித்து பேசினார் சந்திரபாபு. அதேபோல, ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், மா.கம்யூ., பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, மே.வங்க முதல்வர் மம்தா, உ.பி., சென்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், லோக்தந்திரிக் ஜனதா தள கட்சித் தலைவர் சரத்யாதவ் என்று பல தலைவர்களை சந்தித்தார், சந்திரபாபு.

சரத்பவார் :இந்நிலையில், ராகுலை 2வது முறை சந்தித்த பிறகு மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்தார், சந்திரபாபு நாயுடு. தேர்தலுக்கு பின்னர், பா.ஜ., அல்லாத அரசமைப்பது தான் தனது நோக்கம் என்று வெளிப்படையாக அறிவித்து இந்த சந்திப்புகளை அரங்கேற்றி வருகிறார், நாயுடு.

சந்திரசேகர ராவ் :ஏற்கனவே தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், 3 வது அணி அமைக்கும் முயற்சியில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை சந்தித்தார். ஆனால், ஸ்டாலின் வெளிப்படையாக 3வது அணியை மறுத்து, காங்கிரஸ் தலைமையில் தான் ஆட்சி என்று உறுதிப்படுத்தினார்.

பின்னடைவு :ஆனால், இடதுசாரிகள் இதுவரையில், காங்கிரஸ், பா.ஜ., இல்லாத மூன்றாவது அணியின் தலைமையிலான ஆட்சி குறித்த சாத்தியங்களை கைவிடவில்லை என்பதால், சந்திரபாபு நாயுடுவின் தீவிர சந்திப்புகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதேபோல, மம்தா, மாயாவதி மற்றும் அகிலேஷ் உள்ளிட்டோர் காங்., பா.ஜ., அல்லாத ஆட்சி, அதற்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தருவது போன்ற சாத்தியங்களையும் முன் வைத்துள்ளனர்.

ராகுலுக்கு மறுப்பு?இதே போன்ற கருத்துகளுடன் ஒடிசா முதல்வர் பிஜூபட்நாயக், சந்திரசேகர ராவ் உள்ளிட்ட தலைவர்களும் இருப்பதால், ராகுலை பிரதமராக்கும் முயற்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.எனவே, மே 23 தேர்தல் முடிவுகளுக்கு பின்னரே, இந்த சந்திப்புகளின் பலன் தெரியவரும்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)