மன்னிக்க முடியாது: பிரக்யா மீது பிரதமர் கோபம்

புதுடில்லி: கோட்சேவை தேசபக்தர் எனக்கூறிய சாத்வி பிரக்யா சிங்கை மன்னிக்க முடியாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பா.ஜ., கண்டனம்சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு ஹிந்து; அவரது பெயர் கோட்சே' என, மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான, கமல்கூறியிருந்தார். இது குறித்து, ம.பி., மாநிலம் போபாலில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் சாத்வி பிரக்யா சிங் கூறியதாவது: நாதுராம் கோட்சே, ஒரு தேசபக்தராக இருந்தார்; எப்போதும் அவர், தேசபக்தர்தான். அவரை பயங்கரவாதி என்பவர்கள், கண்ணாடியில் தங்கள் முகத்தை பார்க்கட்டும். அவர்களுக்கு, தேர்தலில், மக்கள் பதிலடி கொடுப்பர்.இவ்வாறு, அவர்கூறினார். இதற்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்திருந்தது.

கருத்து தவறுஇது தொடர்பாக டிவி ஒன்றுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டி: மஹாத்மா காந்தி, கோட்சே குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தவறானவை. மோசமானவை. தனது பேச்சிற்காக பிரக்யா சிங் மன்னிப்பு கேட்டிருக்கலாம். ஆனால், அவரை என்னால், மன்னிக்க முடியாது எனக்கூறியுள்ளார்

3 பேருக்கு நோட்டீஸ்இதனிடையே, கோட்சே குறித்த பிரக்யா சிங், மத்திய அமைச்சர் அனந்த குமார் ஹெக்டே, எம்.பி., நலீன் குமார் கதீல் ஆகியோரின் கருத்துகள் கட்சியின் கொள்கைக்கு உட்பட்டது அல்ல. இது அவர்களின் தனிப்பட்ட கருத்து. பா.ஜ., ஒன்றும் செய்ய முடியாது. 3 பேரும் தங்களின் கருத்துகளை திரும்ப பெற்று கொண்டு, மன்னிப்பு கேட்டுள்ளனர்.
இருப்பினும், அவர்களின் கருத்துகள் கட்சியின் கொள்கைக்கு எதிராக உள்ளதால், அவர்களுக்கு விளக்கம் கேட்டு 10 நாட்களுக்குள் நோட்டீஸ் அனுப்பப்படும் எனக்கூறினார். இதனை தொடர்ந்து 3 பேருக்கும் பா.ஜ.,ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சஸ்பெண்ட்இதனிடையே, மகாத்மா காந்தி பாகிஸ்தானின் தந்தை என சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட ம.பி.,யை சேர்ந்த பா.ஜ., நிர்வாகி அனில் சவுமித்ரா, கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தனது கருத்து குறித்து 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)