காங்., கொடியை எதிர்த்து வழக்கு

புதுடில்லி: தேசியக் கொடியைப் போன்ற கொடி வைத்துள்ள கட்சிகளை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பா.ஜ., பிரமுகரும், வழக்கறிஞருமான, அஸ்வினி உபாத்யாய், டில்லி உயர் நீதிமன்றத்தில், பொது நலன் மனு தாக்கல் செய்துள்ளார்; மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மதம், இனம் தொடர்பான வாசகங்களை வைத்துள்ள கட்சிகளின் பெயர்களை, தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல், தேசியக் கொடியை போல் தோற்றமளிக்கும் கொடியை வைத்துள்ள கட்சிகளையும் ஆய்வு செய்ய வேண்டும். இவற்றை மாற்றுவதற்கு, அந்தக் கட்சிகளுக்கு மூன்று மாதம் அவகாசம் அளிக்க வேண்டும். அவ்வாறு மாற்றாவிட்டால், அந்தக் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

ஹிந்து சேனா, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், ஏ.ஐ.எம்.ஐ.எம்., போன்ற கட்சிகளின் பெயர்களில், மதம் தொடர்பான வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல், காங்கிரஸ் கட்சியின் கொடி, நம் தேசியக் கொடியைப் போன்று உள்ளது. இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்துக்கு எதிரானது. அதனால், கட்சிகளின் பெயர்கள் மற்றும் கொடிகளை ஆய்வு செய்ய, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
17-மே-2019 20:52 Report Abuse
SIVA. THIYAGARAJAN நாட்ல வர வர போக்கிரிகள் போக்கிரி தன பேச்சுகள் வன்முறைகள் இதெல்லாம் இறையாண்மை அற்ற ஜீவ காருண்யமற்ற அற்பர்களிடமிருந்துதான் உண்டாவதாக நிணைக்க தோன்றுகிறது. அவர்களை இனம் கண்டு ஒடுக்கிடனும். அப்போதான் நாட்டில் நல்லாட்சியை காணமுடியும். ஆட்சியாளர்களால் நல்லாட்சியை கொடுக்கவும் முடியும். இல்லையேல் சிரமமேதான்.....
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
17-மே-2019 20:48 Report Abuse
SIVA. THIYAGARAJAN நல்ல வழக்கு ஏற்புடையதே....
Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-மே-2019 19:45 Report Abuse
Chinnappa Pothiraj இத்தனை வருடங்கள் இல்லாத கேள்வி இன்று ஏன் கேட்கிறார்கள் என்று சொல்கிறார்களே. மன்னர் ஆட்சியில் இருந்து முகலாய ஆட்சியும், பிரிட்டிஷ் ஆட்சியியும் நடைபெற்றது பின் ஏன் சுதந்திரம் அடைய வேண்டும் என்ற அவசியம் தேவை இல்லை அல்லவா.மனிதன் சுயமரியாதை, தன்மானத்துடன் வாழவேண்டும்.இவர்கள் எல்லாம் காந்தி வழி குடும்பமா? காங்கிரஸ் இன்டிகேட்,சின்டிகேட் என்று பிரிந்தது.அடிமைகளுக்கு அடிமை வாழ்வு தான் பிடிக்கும்.சிந்தித்து செயல் படுங்கள் நண்பர்களே.இன்றய உலகத்தின் வளர்ச்சியைப் பாருங்கள்.நம் பாரதநாடு பாருக்குள்ளே நல்ல நாடு பாரதநாடு என்றென்றும் என்பதை மெய்ப்பிக்க வேண்டும்.சிந்திப்பீர்,செயல்படுவீர்,வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்.
17-மே-2019 14:57 Report Abuse
Naushad Babjohn
agni - chennai,இந்தியா
17-மே-2019 13:29 Report Abuse
agni தாமரைதேசிய மலர்,மாம்பழம் தேசிய பழம் ,புலி தேசிய விலங்கு அப்படினு சொல்லிட்டே போகலாம்,ஆனா மூவர்ண கொடியை திடீர்ப்பார்த்தா எந்த ஒரு இந்தியனுக்கும் இந்தியாவையும் இந்தியதேசிய உணர்வையும் மட்டுமே நியாபக படுத்தும்.ஏன்னா வெறும் இந்த மூன்று வண்ணமும் அமைப்பும் இந்தியா என்ற எண்ணத்தை மட்டுமே பிரதிபலிக்கிறது.மலர்,பழம்,மரம் இவற்றிற்கு இயற்கை,வடிவம்,நிறம் வகைகள்,வியாபாரம்,குணம்,தன்மை இப்படி பல தன்மைகள் இருக்கு இவற்றை நாம் பார்க்குதோ பயன்படுத்தும் போதோ நமக்கு அதனோட தன்மையே மேலோங்கி இருக்கும்.ஆனா இந்திய மூவர்ண கொடியை பார்க்கும் போது நம் உடல்,மனம்,உணர்வு நம் இந்தியர் என்ற எண்ணம் உணர்வு நம்முள் தானாகவே வருகிறது.இந்த மூவர்ணத்தை பள்ளி குழந்தை முதல் முதியவர் வரை நம் சுதந்திர,குடியரசு நாட்களில் நெஞ்சில் அணிகிறோம்,நம் மூவர்ண கொடியை பார்த்தே வந்தேமாதரம் என்று சொல்கிறோம். இந்த மூவர்ணத்தை சேர்த்து காகிதத்தில்,துணியில் எங்கு பார்த்தாலும் இந்தியா என்ற எண்ணமே எழும்.நம் தேசிய கீதம்,தேசிய மூவர்ண கொடி இவை நம் சுதந்திர இந்தியாவுக்காகவே இவை மிக ஆழமான தேச உணர்வோடு,சக்தியோடு,இந்தியருக்கு தேசிய உணர்வூட்டும் வகையில் பிறந்தது.இது அனைத்து நாடுகளுக்கு பொருந்தும்.இதனால் காங்கிரஸின் கட்சின் கொடியை தீடீரென யார் பார்த்தாலும் முதலில் நமக்கு இந்திய தேசிய கொடியின் எண்ணமே மனதில் தோன்றும் .எனவே அவர்கள் கட்சிக்கொடியை மாற்றுவது அவசியமே.
agni - chennai,இந்தியா
17-மே-2019 13:22 Report Abuse
agni தாமரைதேசிய மலர்,மாம்பழம் தேசிய பழம் ,புலி தேசிய விலங்கு அப்படினு சொல்லிட்டே போகலாம்,ஆனா மூவர்ண கொடியை திடீர்ப்பார்த்தா எந்த ஒரு இந்தியனுக்கும் இந்தியாவையும் இந்தியதேசிய உணர்வையும் மட்டுமே நியாபக படுத்தும்.இந்த மூவர்ணத்தை பள்ளி குழந்தை முதல் முதியவர் வரை நம் சுதந்திர,குடியரசு நாட்களில் நெஞ்சில் அணிகிறோம்,நம் மூவர்ண கொடியை பார்த்தே வந்தேமாதரம் என்றான் சொல்கிறோம். இந்த மூவர்ணத்தை சேர்த்து காகிதத்தில்,துணியில் எங்கு பார்த்தாலும் இந்தியா என்ற எண்ணமே எழும்.ஏன்னா வெறும் இந்த மூன்று வண்ணமும் இந்தியா என்ற எண்ணத்தை மட்டுமே பிரதிபலிக்கிறது.மற்ற தேசிய சின்னங்கள் பூ,பழம்,விலங்கு இதெல்லாம் பார்த்தா இந்திய சுதந்திரம் அடைவதற்கு முன்பே அவை இருந்திருக்கு சுதந்திரத்திற்கு பின் தான் அவை இந்திய சின்னங்களாக அறிவிக்கப்பட்டது எனக்கு தெரிஞ்சு ஒரு பொருளா தான் நமக்கு அடையாளம் தெரியும்.இவற்றை நாம் எங்கு பார்த்தாலும் தேசிய மலர்,தேசிய பழம் ,மரம் ,விலங்கு என அடையாளம் பார்க்கிறதில்லை நம் தேசிய உணர்வு வரும் போது மட்டுமே இவற்றை நாம் தேசிய சின்னங்களாக குறிப்பிடுகிறோம்.ஆனா தேசிய கொடி,தேசிய கீதம் இவற்றை பார்க்கும் போடும் கேட்கும் போதும் நம் மனது இந்தியா எனும் ஆழமான உணர்வு நம்மை மெய் மறக்க செய்கிறது.ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும்.மலர்,பழம்,மரம் இவற்றிற்கு இயற்கை,வடிவம்,நிறம் வகைகள்,வியாபாரம்,குணம்,தன்மை இப்படி பல தன்மைகள் இருக்கு இவற்றை நாம் பார்க்குதோ பயன்படுத்தும் போதோ நமக்கு அதனோட தன்மையே மேலோங்கி இருக்கும்.ஆனா இந்திய மூவர்ண கொடியை பார்க்கும் போது நம் உடல்,மனம்,உணர்வு நம் இந்தியர் என்ற எண்ணம் உணர்வு நம்முள் தானாகவே வருகிறது.நம் தேசிய கீதம்,தேசிய மூவர்ண கொடி இவை நம் சுதந்திர இந்தியாவுக்காகவே இவை மிக ஆழமான தேச உணர்வோடு,சக்தியோடு,இந்தியருக்கு தேசிய உணர்வூட்டும் வகையில் பிறந்தது.இது அனைத்து நாடுகளுக்கு பொருந்தும். காங்கிரஸின் கட்சின் கொடியை தீடீரென யார் பார்த்தாலும் முதலில் நமக்கு இந்திய தேசிய கொடியின் எண்ணமே மனதில் தோன்றும் .எனவே அவர்கள் கட்சிக்கொடியை மாற்றுவது அவசியமே.
17-மே-2019 12:39 Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இந்திரா காங்கிரஸ் கட்சி கொடியை மாற்றிக்கொள்வது தான் சரி. அதே போல காந்தி என்கிற போலி பெயரை மாற்றி கண்டி என்கிற உண்மையான சமூக பெயரை உபயோகிக்க வேண்டும். கொடி, பெயரிலேயே பித்தலாட்டம் என்றால் ஆட்சி எப்படி நடக்கும்
S.Baliah Seer - Chennai,இந்தியா
17-மே-2019 11:59 Report Abuse
S.Baliah Seer தேசியக்கொடி போல் உள்ள காங்கிரஸ் கொடி 70 வருடங்களாக உள்ளது. இத்தனை வருடங்களாக என்ன செய்தீர்கள்.தேர்தல் சமயத்தில் மட்டுமே கண்ணுக்குத் தெரியும் இது மற்ற நேரங்களில் தெரியவில்லையா?
Rajavelu E. - Gummidipoondi,இந்தியா
17-மே-2019 11:33 Report Abuse
Rajavelu E. அப்படியே பிஜேபியின் தாமரை சின்னத்தை எதிர்த்தும் ஒரு வழக்கு போடுங்க.
இந்தியன் kumar - chennai,இந்தியா
17-மே-2019 11:29 Report Abuse
இந்தியன் kumar இத்தாலி காங்கிரஸ் கொடி இந்திய அரசின் கொடி போல் இருப்பதை விரைவில் ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இதனை நாட்கள் நீடிக்க விட்டதே மாபெரும் தவறு.
மேலும் 23 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)