அதிக வித்தியாசத்தில் ஜெயிக்க மோடி விருப்பம்

புதுடில்லி: வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடியை குறைந்தது 7 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க அவரது தேர்தல் பணியாளர்கள் திட்டமிட்டு வேலை செய்கின்றனர்.

வாரணாசியில் மே 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இங்கு மோடிக்காக தேர்தல் பணியாற்றும் ஒருவர் கூறும்போது, ‛‛நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் மோடியை வெற்றி பெற வைக்க நாங்கள் பாடுபடுகிறோம்'' என்றார்.

வாரணாசி தொகுதியில் ஆயிரத்து 800 பூத்கள் இருக்கின்றன. அனைத்து பூத்களிலும் மோடிக்கு அதிக ஓட்டு விழ வேண்டும் என்பதே அக்கட்சியினரின் நோக்கம். 2014 தேர்தலில் வாரணாசியில் மோடியின் ஓட்டு வித்தியாசம் 3 லட்சத்து 71 ஆயிரம். அவரை அடுத்து வந்த ஆம் ஆத்மி வேட்பாளரும் அக்கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், 2 லட்சம் ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.


இம்முறை நாட்டிலேயே அதிக வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும் என மோடி விரும்புகிறார். சென்ற தேர்தலில் மோடி போட்டியிட்ட இன்னொரு தொகுதியான வதோதராவில், மோடி 5 லட்சத்து 70 ஆயிரம் வித்தியாசத்தில் ஜெயித்தார். பின் இந்த தொகுதியை ராஜினாமா செய்தார்.

உ.பி.,யில் அதிக வித்தியாசம்2014 தேர்தலில் உ.பி.,யில் காசியாபாத் தொகுதியில் போட்டியிட்ட ஜெனரல் வி.கே.சிங், 5 லட்சத்து 67 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்து, உ.பி.,யிலேயே அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ஆனார். இந்த தேர்தலில் மோடிக்கு போட்டியாக அதிக வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும் என்ற முனைப்பில் சமாஜ்வாதி தலைவர் முலாயமும் இருக்கிறார்.இவர்கள் தவிர, ரேபரேலியில் போட்டியிடும் சோனியா, லக்னோவில் போட்டியிடும் ராஜ்நாத் சிங் ஆகியோரும் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற காத்திருக்கின்றனர்.

வீடியோ செய்திஇந்நிலையில் வாரணாசி மக்களுக்கு வீடியோ மூலம் பிரதமர் மோடி அனுப்பிய செய்தி: யாரேனும் ஒருவர் வாரணாசி நகருக்கு ஒருமுறை வந்தால், அந்நகரின் அங்கத்தினராக மாறி விடுகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில், இதனை நான் உணர்ந்துள்ளேன். அரசியல் மற்றும் ஆன்மிகத்தில் என்னை ஊக்கப்படுத்தவும், வழிகாட்டவும் வாரணாசி, என்னுள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், வாரணாசி வளர்ச்சியில் மக்களின் பங்களிப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டிற்கு முன்மாதிரியாக உள்ளது. சாலை வழியாக நடந்த பேரணியில் அனைத்தையும் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என உறுதி அளித்தீர்கள். உங்களது வார்த்தையில் நம்பிக்கை உள்ளது. என்னை பொறுத்தவரை அந்த வார்த்தைகளே வாக்குறுதிகள். வாரணாசியில் வசிக்கும் ஒவ்வொருவரும் இந்த தேர்தலில் மோடிக்காகவும், மோடியாகவும் போட்டியிடுகின்றனர். ஜனநாயகத்திற்கான திருவிழாவில் அதிகளவு மக்கள் ஓட்டுப்போட வேண்டும். இவ்வாறு அந்த வீடியோவில் கூறியுள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)