அரசியலை விட்டு விலக தயார்: தமிழிசைக்கு ஸ்டாலின் சவால்

தூத்துக்குடி: திமுக தலைவர் ஸ்டாலின், பா.ஜ.,வுடனும் பேசி வருகிறார் என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறியுள்ளார். இதனை மறுத்துள்ள ஸ்டாலின், இதனை நிநிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.

நிறம் மாறுகிறதுதூத்துக்குடியில் நிருபர்களை சந்தித்த தமிழிசை கூறுகையில், திமுக தலைவர் ஸ்டாலின், பா.ஜ.,வுடன் பேசி கொண்டிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியது உண்மை. ஒரு பக்கம் ராகுல், மற்றொரு பக்கம் சந்திரசேகர ராவ், மறுபக்கம் மோடியுடன் ஒருவர் மூலமாக ஸ்டாலின் பேசி வருகிறார். திமுக நிறம் மாறுவது வாடிக்கை. முதலில் ராகுல் பிரதமர் எனக் கூறியவர், பின்னர் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் பேசியுள்ளார். நட்பு ரீதியிலான சந்திப்பு எனக்கூறி, ஒன்றரை மணி நேரம் பேசியுள்ளார்.

வெற்றி உறுதிகருத்து கணிப்புகள் எல்லாம் பா.ஜ.,வுக்கு ஆதரவாக உள்ளன. ஸ்டாலின் தான் குழப்பத்தில் உள்ளார். பா.ஜ., கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. தமிழகத்தில் தவறான முடிவு எடுப்பதற்கு ஒரு தலைவர் உண்டு என்றால் அவர் ஸ்டாலின் தான். தேர்தல் நேரத்தில் சோதனை நடத்துவது வாடிக்கை தான். தூத்துக்குடியில் தாமரை நிச்சயம் மலரும். இவ்வாறு அவர் கூறினார்.

வேதனைஇதனை மறுத்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: பா.ஜ.,வுடன் நான் பேசியதை நிருபித்து விட்டால், அரசியலில் இருந்து விலக தயார். இதனை நிருபிக்க தவறினால், தமிழிசையும், மோடியும் விலக தயாரா? மோடியுடன் நான் பேசியதாக பொய் கூறிய தமிழிசைக்கு கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் பிறந்த தமிழிசை பொய் பேட்டி அளித்ததற்கு வேதனைப்படுகிறேன். பொய் பேட்டி மூலம் தமிழிசை தரம் தாழ்த்தி கொண்டுள்ளார். தோல்வியின் விளிம்புக்கு சென்றுவிட்டதால், பா.ஜ., இது போன்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.

கடைசி முயற்சிராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது திமுக தான். திமுக முன்னெடுத்த பிரசாரத்தை மழுங்க செய்யும் முயற்சி. திமுக தலைமையிலான கொள்கை கூட்டணியில் குளத்தில் கல் எறியும் பா.ஜ., முயற்சி தோல்வி அடையும். தேர்தல் முடிவுக்கு பிறகு மோடி வீட்டிற்கு அனுப்பப்படுவார் என்பதை உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
திரைமறைவில் திமுக பேசியது கிடையாது. அதிமுக - பா.ஜ., போல் திரைமறைவில் தரகு பேசும் கட்சி திமுக அல்ல. மேலிட பாஜ தலைவர்களின் சுயநலனுக்கு, கடைசி பகடைக்காயாக தமிழிசை பயன்படுத்தப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)