ஸ்டாலின் - சந்திரசேகர ராவ் சந்திப்பு

சென்னை : தமிழகம் வந்துள்ள தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலினின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது 3வது அணி குறித்து ஸ்டாலினுடன் சந்திரசேகர ராவ் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. முன்னதாக சந்திரசேகர ராவ், திருச்சி - ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)