டில்லி, 'சலோ'

லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, வரும், 23ம் தேதி நடக்கிறது. அன்று இரவோ அல்லது மறுநாள் காலையோ, அனைத்து முடிவுகளும் வெளியாகி விடும் என, சொல்லப்படுகிறது. மோடி எதிர்பார்ப்பது போல, பா.ஜ., கூட்டணிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என, எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன.அப்படி ஒரு இழுபறி நிலை ஏற்பட்டால், மாநில கட்சிகளின் உதவி இல்லாமல், யாரும் ஆட்சி அமைக்க முடியாது. இந்த எண்ணத்தில், பல மாநில கட்சிகள், 23ம் தேதிக்குப் பின், டில்லியில் முகாமிட்டு, ஆட்சியில் பங்கு கொள்ள தயாராகி வருகின்றன. இதற்காக, சம்பந்தப்பட்ட கட்சிகள், தங்களின் தலைவர்களுக்காக, டில்லி நட்சத்திர ஓட்டல்களில், அறைகளை, 'புக்' செய்துள்ளன. இதே போல, டில்லியில் உள்ள, மாநில, 'கெஸ்ட் ஹவுஸ்'களும், 'புக்' ஆகிவிட்டன.

தேர்தல் முடிவுகளுக்குப் பின், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், டில்லி வர உள்ளார். ஸ்டாலின் டில்லி வந்தால், தமிழ்நாடு இல்லத்தில் தங்குவது இல்லை; நட்சத்திர ஓட்டலில் தான் தங்குகிறார். டில்லியின் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில், இவருக்கும், மற்ற தலைவர்களுக்கும், அறை ஒதுக்கப் பட்டுள்ளது.ஒருவேளை மத்தியில், காங்கிரஸ் தலைமையில், ஐ.மு., கூட்டணி ஆட்சி ஏற்பட்டால், தி.மு.க., அதில் பிரதான பங்கு வகிக்கும். தன் கட்சியினருக்காக, முக்கிய துறைகளை வாங்க, ஸ்டாலின், டில்லியில் தங்கி செயல்பட உள்ளார்.கடந்த, 2004ல், மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதி, இப்படித் தான் நட்சத்திர ஓட்டலில் தங்கி, முக்கிய துறைகளை தன் கட்சியினருக்கு வாங்கிக் கொடுத்தார். அப்பாவின் வழியைப் பின்பற்றுகிறார் ஸ்டாலின்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)