‛சித்தி'யை தோற்கடிக்க பிரியங்கா மும்முரம்

புதுடில்லி: தனது சித்தப்பா சஞ்சயின் மனைவியும் தனது சித்தியுமான மத்திய அமைச்சர் மேனகாவை தோற்கடிக்கும் வேலையிலும் பிரியங்கா மும்முரமாக இறங்கி உள்ளார்1980ல் விமான விபத்தில் சஞ்சய் இறந்த பிறகு, மாமியார் இந்திராவின் வீட்டில் இருந்து வெளியேறினார் மேனகா. எல்லா வீட்டிலும் இருக்கும் மாமியார் - மருமகள் பிரச்னை தான் இதற்கும் காரணம்.

அதன் பிறகு அவர் பா.ஜ.,வில் சேர்ந்து மத்திய அமைச்சராகவும் ஆகிவிட்டார்.தற்போது அவர் சுல்தான்பூர் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து போட்டியிடுபவர், ஒரு காலத்தில் சஞ்சயின் நண்பராக இருந்த சஞ்சய் சிங். சஞ்சய் சிங், பா.ஜ.,வில் இருந்து காங்.,கிற்கு சென்றவர்.

சுல்தான்பூரை தேர்வு செய்தது ஏன்சென்ற தேர்தலில் சுல்தான்பூரில் மேனகாவின் மகன் வருணும், பிலிப்பிட் தொகுதியில் மேனகாவும் போட்டியிட்டனர். இம்முறை இருவரும் பரஸ்பரம் தொகுதிகளை மாற்றிக்கொண்டனர்.பிரியங்காவுக்கு தனது ஒன்றுவிட்ட சகோதரர் வருணுடன் நல்ல உறவு உள்ளது. ஆனால் மேனகாவிடம் இருந்து சோனியாவும் ராகுலும் விலகியே இருக்கின்றனர். ஏனெனில் இவர்களுக்கு மேனகாவை பிடிக்காது.
மேனகாவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே சுல்தான்பூரில் காங்., வேட்பாளர் சஞ்சய் சிங்கை ஆதரித்து பேரணி சென்றார் பிரியங்கா. அப்போது எதிர் திசையில் வந்த மேனகாவின் வாகனம், இந்த பேரணி கூட்டத்தில் சிக்கிக் கொண்டது.ஏற்கனவே கூட்டத்தினரைப் பார்த்து கையசைத்து வந்துகொண்டு இருந்த பிரியங்கா, மேனகாவின் காரைப் பார்த்து அவரை நோக்கி கை அசைத்தார். ஆனால் மேனகா கண்டுகொள்ளவில்லை. உடனே போலீசார் தலையிட்டு, மேனகாவின் கார் செல்ல வழி ஏற்படுத்தினர். பின்னர் இதுபற்றி நிருபர்கள் கேட்டதற்கும் மேனகா பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

விட மாட்டார் போல.,ஆனால் பிரியங்கா கூறும்போது, ‛‛எங்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து நான் பிரசாரம் செய்தேன். வேறு யாருக்கும் எதிராக அல்ல'' என்றார். ஆனால், பிரியங்காவின் தீவிர பிரசாரத்தை பார்ப்பவர்கள், ‛‛மேனகாவை தோற்கடிக்காமல் பிரியங்கா விட மாட்டார் போலிருக்கிறது'' என்கின்றனர். முன்பெல்லாம் மேனகா மற்றும் வருணுக்கு எதிராக பிரசாரம் செய்வதை சோனியாவின் குடும்பத்தினர் தவிர்த்து வந்தனர்.2014ல் சுல்தான்பூரில் வருண் போட்டியிட்டபோது, கட்சி தொண்டர்களின் கூட்டத்தில் மட்டும் பிரியங்கா கலந்துகொண்டார்.

2014 தேர்தலில் சுல்தான்பூரில் போட்டியிட்ட வருண், 4.10 லட்சம் ஓட்டு பெற்று, 1.80 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு அவர் மீது ஏற்பட்ட அதிருப்தியில், இம்முறை சுல்தான்பூரில் மேனகாவுக்கு எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது. இதை மேனகா எதிர்பார்க்கவில்லை.
அது மட்டுமல்லாமல், எனக்கு ஓட்டு அளிக்காவிட்டால் முஸ்லீம்களுக்கு எந்த வேலையும் செய்து கொடுக்க மாட்டேன் என்று வெளிப்படையாக கூறி சர்ச்சையில் மாட்டிக்கொண்டார் மேனகா. ஆனாலும் பிலிப்பிட் தொகுதியில் தான் செய்த பணிகளை பார்த்துவிட்டு எனக்கு ஓட்டளியுங்கள் என்றும் கூறி பிரசாரம் செய்கிறார் மேனகா.
2009ல் இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர் சஞ்சய் சிங். இங்கு சமாஜ்வாதி மற்றும் பகுஜன் கட்சிகள் இணைந்து ஏற்கனவே 4.60 லட்சம் ஓட்டுகளை பெற்றுள்ளன. எனவே இங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)