ஜெய் ஸ்ரீராமுக்கு போட்டி ஜெய் காளி

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் பா.ஜ.,வின் கோஷமான ஜெய் ஸ்ரீராமுக்கு பதிலாக ஜெய் மாகாளி என்ற கோஷத்தை திரிணாமுல் காங்., முன்னெடுத்துள்ளது.


தனியார் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள மம்தா கூறுகையில், மேற்கு வங்கத்தில் பா.ஜ., ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடலாம். ஆனால் நாங்கள் ஜெய் பெங்கால், ஜெய் மாகாளி என்றே சொல்லுவோம். பா.ஜ.,வின் முழக்கங்கள் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்.

சவாலும் இல்லை




இந்து - முஸ்லிமை வைத்து நாங்கள் அரசியல் செய்ய மாட்டோம். எல்லா மதமும் எங்கள் மதம். ஒவ்வொருவரின் சாதியும் எங்கள் சாதி. பா.ஜ., ஏன் இது போன்ற அரசியலை செய்வதில்லை என மோடியிடம் போய் கேளுங்கள். மேற்குவங்கத்தில் பிரதமர் மோடியிடம் இருந்தோ, பா.ஜ., இடம் இருந்தோ எங்கள் கட்சிக்கு எந்த சவாலும் இல்லை. அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து பேசுவோம். 2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ., மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும்.

எனக்கும் மோடிக்கும் இடையேயான தனிப்பட்ட தாக்குதல்களை துவக்கியதே மோடி தான். என்னை அவர் ஸ்பீட் பிரேக்கர் சகோதரி என்கிறார். நான் அவரை சொல்கிறேன், காலாவதியான தலைவர். நான் ஜனநாயகம் பற்றி பேசுகிறேன். ஆனால் அவர் மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார் என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)