வெற்றிலை விவசாயிகளிடம் ஆதரவு கேட்ட ஸ்டாலின்

கரூர் : அரவக்குறிச்சி தொகுதியில், வெற்றிலை வியாபாரிகளிடம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், குறைகள் கேட்டறிந்தார்.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிடும், செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார்.நேற்று காலை, 7:00 மணிக்கு, புகழூரில், வேட்பாளர் செந்தில் பாலாஜியுடன் சென்ற ஸ்டாலின், வெற்றிலை விவசாயிகளை சந்தித்து, ஆதரவு திரட்டினார் . 'அரவக்குறிச்சி பகுதியில், வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். பாசன வாய்க்கால்களை துார்வார வேண்டும்.

நீர் திறப்பு தகவலை, முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை, விவசாயிகள் முன்வைத்தனர்.ஸ்டாலின், ''தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்,'' என, உறுதியளித்தார். பின், தவிட்டுப்பாளையம் பகுதியில் நடந்து சென்று, பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.அப்பகுதி மக்கள், மொபைல் போனில், அவருடன் ஆர்வமாக, 'செல்பி' எடுத்தனர். பின், அங்குள்ள டீக்கடையில் டீ குடித்து, கரூருக்கு புறப்பட்டு சென்றார். தொடர்ந்து, பகல், 11:00 மணிக்கு, கோவை சாலை, சாலப்பாளையம் ஜெயந்தி நகரில், பொதுமக்களை ஸ்டாலின் சந்தித்து, குறைகளை கேட்டறிந்தார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)