ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரிகள்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: 'ஆளும் கட்சிக்கு ஆதரவாக சில தேர்தல் அதிகாரிகள் செயல்படுகின்றனர். ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும்,' என தேர்தல் ஆணையத்துக்கு திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்:இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பதில் தமிழகத்தில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெறுகின்றன. ஓட்டுப்பதிவு இயந்திரங்களையும், மையங்களையும் பாதுகாக்க மாநில சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும். ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் ஓட்டு இயந்திரங்களை கொண்டு செல்லப்பட்டது கண்டனத்துக்கு உரியது. தேர்தல் அதிகாரிகளில் சிலர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

தடுமாறுகிறார் சாஹூ:தேர்தல் ஆணையம் சம்பந்தமே இல்லாதது போல் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது கவலை அளிக்கிறது. சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் அதிகாரி சாஹூ தடுமாறுகிறார். அவர் மீதான நம்பிக்கையை, திமுக மற்றும் எதிர்கட்சிகள் இழந்து விட்டன. அவரது பேட்டி ஒரு புதிய பிரச்னைக்கு அடித்தளம் அமைப்பது போல உள்ளது. 46 ஓட்டு சாவடிகளில் தவறு என்ன என்பது பற்றிய விவரங்களையும், மறுஓட்டுப்பதிவுக்கு பரிந்துரைத்த விவரங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் குற்றம் சாட்டி உள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)