மோடி பிரதமரா: தடுக்க வியூகம்

புதுடில்லி: மோடி மீண்டும் பிரதமராக விடாமல் செய்ய வேண்டிய வியூகங்களை 21 எதிர்க்கட்சிகள் இப்போதே வகுக்க தொடங்கி விட்டன.

ஓட்டு எண்ணிக்கை வெளியாகும் மே 23 அன்று அல்லது அதற்கு முன்பே ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இந்தக் கட்சிகள் சந்திக்க திட்டமிட்டுள்ளன. தனிப்பெரும் கட்சியாக ஜெயித்தாலும் பா.ஜ.,வை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டாம் என்று அவை கேட்டுக்கொள்ள உள்ளன.


தேர்தல் முடிவுகள் வெளி வந்ததுமே இக்கட்சிகள், ஜனாதிபதியிடம் தங்கள் ஆதரவு யாருக்கு என்று தெரிவித்து கடிதம் கொடுக்க உள்ளன. அதற்கு முன்பு மே 21 அன்று கூடி, யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்றும் பேச உள்ளன.

ராகுலுடன் சந்திரபாபு ஆலோசனைஇது குறித்து ராகுலுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசி உள்ளார். ஓட்டு எண்ணிக்கைக்கு இரு நாட்களுக்கு முன் அனைத்து எதிர்க்கட்சிகளையும் கூட்டி பேசுமாறு ராகுலிடம் சந்திரபாபு யோசனை தெரிவித்துள்ளார்.ஏற்கனவே இது போன்ற யோசனையுடன் கேரள முதல்வர் பினராயியை சந்தித்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கும் யோசனையை முன் வைத்துள்ளார்.

ஜனாதிபதி யாரை அழைப்பார்எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காவிட்டால், ஜனாதிபதியின் பங்கு முக்கியமாக இருக்கும். தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்குமாறு அவர் அழைக்க வாய்ப்பு உள்ளது.எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்றால், பார்லிமென்டை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்தவும் வாய்ப்பு உள்ளது.

1996 தேர்தலில் பா.ஜ., தனிப்பெரும் கட்சியான போது, ஆட்சி அமைக்குமாறு அப்போதைய ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா அழைத்தார். பார்லிமென்டில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாததால் பிரதமர் பதவியை வாஜ்பாய் ராஜினாமா செய்தார்.1998 தேர்தலில் 178 இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்றிருந்தது. கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து 252 இடங்கள் அக்கட்சிக்கு இருந்தன. அதாவது, அப்படியும் மெஜாரிட்டி இல்லை. இருந்தாலும் ஆட்சி அமைத்தது.


20 மாதங்களுக்குப் பிறகு நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது ஜெயலலிதா ஆதரவை வாபஸ் பெற்றதால், ஒரு ஓட்டில் பா.ஜ., ஆட்சி கவிழ்ந்தது.
ஆனால் 2014 தேர்தலில் 282 இடங்களுடன் பா.ஜ., தனி மெஜாரிட்டி பெற்றது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தனிக்கட்சிக்கு மெஜாரிட்டி கிடைத்தது. கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து 336 எம்.பி.,க்களின் ஆதரவு அக்கட்சிக்கு இருந்தது.

2019ல் என்ன நடக்கும்:ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பே எதிர்க்கட்சிகள் ஒரே அணியாக இணையா விட்டால், அதிக இடங்களை பெறும்பட்சத்தில் தே.ஜ., கூட்டணியை ஆட்சி அமைக்க ஜனாதிபதி அழைக்கலாம். 272 எம்.பி.,க்களின் ஆதரவு இல்லாவிட்டாலும் யாரை வேண்டுமானாலும் பிரதமராக இருக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொள்ளலாம்.மத்தியில் ஆட்சி அமைப்பது பற்றிய சர்க்காரியா கமிஷன் இதற்கான பரிந்துரைகளை தெரிவித்துள்ளது.

1. தேர்தலுக்கு முன் பல கட்சிகள் ஒரு அணியை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

2. மற்ற கட்சிகளின் ஆதரவுடன் தனிப் பெரும் கட்சி, ஆட்சி அமைக்க உரிமை கோரலாம்.

3. தேர்தலுக்குப் பிறகு சுயேச்சைகள் உள்பட கட்சிகள் அணி அமைத்து, ஆட்சி உரிமை கோரலாம்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)