தேர்தல் முடிவுகள் 5 மணி நேரம் தாமதமாகும்

புதுடில்லி : லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில் 4 முதல் 5 மணி நேரம் தாமதம் ஏற்படும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.


7 கட்டங்களாக நடத்தப்பட்டு வரும் லோக்சபா தேர்தல் மே 19 உடன் நிறைவடைகிறது. மே 23 ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இருப்பினும் இதற்கு முன், ஓட்டு எண்ணிக்கை துவங்கிய சில மணி நேரங்களிலேயே முடிவுகள் தெரிய ஆரம்பித்து விடும். ஆனால் இந்த முறை முடிவுகள் வெளியாக 4 முதல் 5 மணி நேரம் தாமதமாகும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.


நடப்பு லோக்சபா தேர்தலில் முதன் முறையாக ஒப்புகைச்சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு ஓப்புகைச்சீட்டு இயந்திரத்துடன், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்களை ஒப்பிட்டு பார்த்து, ஓட்டுக்களை எண்ண தேர்தல் கமிஷன் திட்டமிட்டிருந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் ஒரு ஒப்புகை சீட்டு இயந்திரத்திற்கு பதிலாக 5 ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களுடன் ஒப்பிட்டு பார்க்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

ஆனால் ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான 50 சதவீதம் ஓட்டுக்களை ஒப்புகை சீட்டு இயந்திரங்களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என 21 எதிர்க்கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது. இருப்பினும் 5 ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டி உள்ளதால் முடிவுகள் வெளியிடுவதற்கு 4 முதல் 5 மணி நேரம் தாமதமாகுல் என தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)