ராஜிவ் விவகாரத்தில் மோடி விதிமீறவில்லை: தேர்தல் ஆணையம்

புதுடில்லி: முன்னாள் பிரதமர் ராஜிவை விமர்சித்த விவகாரத்தில், பிரதமர் மோடி விதிமீறவில்லை என உ.பி., மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

'முன்னாள் பிரதமர் ராஜிவ் ஊழலற்றவர் என, அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால், அவர், 'நம்பர் 1' ஊழல்வாதியாக தான் உயிரிழந்தார்' என, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பேசினார். இதற்கு, காங்., சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மோடியின் இந்த கருத்துக்கு, டில்லி பல்கலையைச் சேர்ந்த, 200 பேராசிரியர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரசாரம் செய்ததாக பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என, காங்., - எம்.பி., சுஷ்மிதா தேவ், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் ராஜிவை விமர்சித்த விவகாரத்தில், பிரதமர் மோடி, வன்முறை ஏற்படுத்தும் விதத்தில் பேசவில்லை எனவும், தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை எனவும், உ.பி., மாநில தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி மிது, சுஷ்மிதா தேவ், தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று(மே 8) விசாரணைக்கு வருகிறது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)