ராகுல், சோனியாவுக்கு ஆதரவு மாயாவதி திடீர் அறிவிப்பு

லக்னோ:உத்தர பிரதேசத்தின் அமேதி லோக்சபா தொகுதியில் போட்டியிடும், காங்கிரஸ் தலைவர் ராகுல்; ரேபரேலியில் போட்டியிடும், அவரது தாய், சோனியாவுக்கு ஓட்டளிக்கும்படி, தன் கட்சியினருக்கு, பகுஜன் சமாஜ் தலைவர், மாயாவதி கூறியுள்ளார். ஆனால், காங்.,குடன் கூட்டணி கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.


லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மொத்தம், 80 தொகுதிகள் உள்ள, உத்தர பிரதேசத்தில், ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிகள் தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த மெகா கூட்டணியில், காங்கிரசை, அவர்கள் சேர்க்கவில்லை.



அதே நேரத்தில், காங்., தலைவர் ராகுலின், அமேதி மற்றும் அவரது தாய், சோனியாவின் ரேபரேலி தொகுதிகளில், வேட்பாளர்களை நிறுத்தவில்லை.இந்த இரண்டு தொகுதிகளுக்கும், இன்று தேர்தல் நடக்க உள்ளது. இதுவரை நடந்துள்ள பிரசாரங்களில், காங்.,கை கடுமையாக விமர்சித்து வந்தார், மாயாவதி.




இந்நிலையில், ''இந்த இரண்டு தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சியினர், ராகுல் மற்றும் சோனியாவுக்கு ஆதரவாக, காங்.,குக்கு ஓட்டளிக்க வேண்டும்,'' என, மாயாவதி கூறியுள்ளார்.அதே நேரத்தில், காங்.,குடன் கூட்டணி கிடையாது என்றும், அவர் கூறி உள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)