ராகுலுக்கு பதற்றம் ஏன்? ஜெட்லி கேள்வி

புதுடில்லி: ராஜிவ் அரசின் நேர்மை குறித்து கேள்வி எழுப்பினால் காங்கிரஸ் தலைவர் ராகுல் பதற்றம் அடைவது ஏன் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

பிரதமர் தாக்குஉத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ராகுலின் தந்தை அவரது விஸ்வாசிகளால் மிஸ்டர் கிளீன் என புகழப்படலாம். ஆனால் அவரது வாழ்க்கை நம்பர் 1 ஊழல்வாதி என்றே முடிந்தது எனக்கூறினார்.

ராகுல் பதில்இதற்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல், மோடி அவர்களே, போர் முடிந்துவிட்டது. உங்களது கர்மா உங்களுக்காக காத்திருக்கிறது. என் தந்தையைப் பற்றிய உங்கள் உள்நம்பிக்கைகளை பரப்புவது எந்த விதத்திலும் உங்களை பாதுகாக்காது உங்களுக்கு எனது அனைத்து அன்பும், ஒரு பெரிய அரவணைப்பும் என பதில் அளித்தார்.
ராகுல் சகோதரி பிரியங்கா வெளியிட்ட அறிக்கையில், உயிரிழந்த ராணுவ வீரர்கள் பெயரால் ஓட்டு சேகரித்து வரும் பிரதமர், அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டின் பேரில் நேர்மையான ஒரு நிரபராதி மனிதரை தனது பேச்சின் மூலம் அவமதித்துள்ளார். ராஜிவ் தனது உயிரை கொடுத்து பாடுபட்ட அமேதி தொகுதி மக்கள் அவரது கு குற்றச்சாட்டிற்கு இந்த தேர்தலில் பதிலளிப்பார்கள் எனக்கூறியுள்ளார்.

பதில் இல்லைஇதற்கு பதிலளித்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வெளியிட்ட அறிக்கை: ராஜிவ் அரசின் நேர்மை குறித்த விவகாரத்தில் கேள்வி எழுப்பினால் ராகுல் பதற்றமடைவது ஏன்? ஒட்டவியோ குட்ரோட்சிக்கு போபர்ஸ் ஆவணங்கள் கிடைத்தது ஏன் ? இதற்கு பதில் வருவது இல்லை.

நேர்மையான மனிதராக விளங்கும் பிரதமரின் நாணயம் குறித்து வாரிசு அரசியல்வாதி கேள்வி எழுப்புகிறார். வாரிசு அரசியல்வாதி எதற்கும் பதிலளிக்க தேவையில்லை என அவர் நினைக்கிறாரா?

பின்னணியில்2014ல் பொருளாதாரம் மெதுவாக போனதற்கும், கொள்கை முடக்கம், ஊழல் ஆகியவற்றின் பின்னணியில் மன்மோகன் சிங் உள்ளார். பார்லிமென்டில் அவரது கட்சி பலத்தை குறைத்தார்.
ஆனால், இன்று உலகில் வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதாரத்தை பேரழிவு என்கிறார்.


இவ்வாறு அதில் கூறியுள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)