ஸ்டாலின் கொதிப்பது ஏன் ? இ.பி.எஸ்.,

சேலம்; அமமுக கட்சியினர் மீது நடவடிக்கை எடுத்தால் திமுக தலைவர் ஸ்டாலின் ஏன் வழக்கு போடுகிறார் ? என முதல்வர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பினார்.

சேலம் விமான நிலையத்தில் முதல்வர் மேலும் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தல் அவகாசம் 3 மாதம் கேட்கப்பட்டுள்ளது. இந்த அவகாசத்தில் நிச்சயம் தேர்தல் நடைபெறும். 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும்.
உள்ளாட்சி தேர்தலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலுக்கு முதலில் திமுகதான் தடை பெற்றது. அதை தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் காரணமாக தேர்தல் தள்ளிபோனது. தோல்வி பயம் காரணமாக வெவ்வேறு யுக்திகளை ஸ்டாலின் கையாளுகிறார்.
எங்கள் கட்சியில் விதிமீறல் செய்த காரணத்தினால் 3 எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமமுக கட்சியினர் மீது நடவடிக்கை எடுத்தால் திமுக தலைவர் ஸ்டாலின் ஏன் வழக்கு போடுகிறார் ? ஸ்டாலின் ஏன் கொதிக்கிறார் ? இதில் இருந்து இருவரும் கூட்டு வைத்துள்ளனர் என்பதை மக்களே புரிந்து கொள்வார்கள். ஆட்சியை கவிழ்க்கவும், கட்சியை உடைக்கவும் திட்டமிட்ட சதி நடக்கிறது.

22 சட்டமன்ற இடை தேர்தலில் திமுகதான் வெற்றி பெறும் என்று கூறும் ஸ்டாலின், எதற்கு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறார்.
திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. இவ்வாறு முதல்வர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)