தேர்தல் பிரசாரத்தில் கெஜ்ரிவாலுக்கு, 'பளார்'

புதுடில்லி:தேர்தல் பிரசாரத்தின்போது, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான, அரவிந்த் கெஜ்ரிவாலின் கன்னத்தில், மர்ம நபர், அறைந்தார்.

புதுடில்லி தொகுதிக்குட்பட்ட, மோத்தி நகரில், அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். திறந்தவெளி ஜீப்பில், பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த ஒருவர், ஜீப்பில் ஏறி, கெஜ்ரிவாலின் கன்னத்தில் அறைந்தார்.உடனடியாக, ஆம் ஆத்மி கட்சியினர், அந்த மர்ம நபரை, ஜீப்பில் இருந்து இறக்கி, சரமாரியாக அடித்து, உதைத்தனர்; பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.அந்த நபர், கைலாஷ் பார்க் பகுதியில், வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்து வரும், சுரேஷ், 33, என்பது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது. எதற்காக, அந்த நபர், முதல்வர் கெஜ்ரிவாலை அறைந்தார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.பா.ஜ.,வின் தூண்டுதலால் தான், இந்த சம்பவம் நடந்துள்ளதாக, ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர், சவுரப் பரத்வாஜும் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், இதை, பா.ஜ., மறுத்துள்ளது.பிரகாஷ்ராஜ் பிரசாரம்

கர்நாடக மாநிலம், மத்திய பெங்களூரு லோக்சபா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும், பிரபல நடிகர், பிரகாஷ் ராஜ், டில்லியில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளருக்காக பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்."சுகாதாரம், கல்வி போன்ற மக்களின் தேவைகளை முன்வைத்து, ஆம் ஆத்மி பிரசாரம் செய்து வருகிறது. அதனால், அந்தக் கட்சி வேட்பாளர்களுக்காக, ஒரு வாரம் பிரசாரம் செய்ய உள்ளேன்," என, டில்லியில், நிருபர்களிடம் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)