பீஹாரில் இவ்வளவு தான்!: பகுஜன் கட்சியினர் பீஹாரில் ஓட்டம்!

மொத்தம், 40 தொகுதிகளை உடைய பீஹார் மாநிலத்தில், ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.உ.பி., முன்னாள் முதல்வர், மாயாவதி தலைமையிலான, பகுஜன் சமாஜ் சார்பில், இந்த மாநிலத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த வர்களில், ஏராளமானோர்ஓட்டம் பிடித்துள்ளனர்.


இதுவரை, 10க்கும் மேற்பட்டோர், இந்த கட்சியும் வேண்டாம்; தேர்தலும் வேண்டாம் என, தப்பியோடியுள்ளனர். அவர்களில், மோதிஹரி தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த அனில் சஹானி, மதுபானியில் போட்டியிட்ட, அலி அஷ்ரப் பட்மி போன்றோர் முக்கியமானவர்கள்.இவர்களைப் போல, இன்னும் பலர், ஓட தயாராக இருப்பதாக வரும் செய்திகளால், மாயாவதி கட்சியினர் கலக்கம் அடைந்து உள்ளனர்.
- கன்ஹையா பெலாரி -
சிறப்பு செய்தியாளர்



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)