அ.தி.மு.க., ஆதரித்து கூட்டணி கட்சிகள் பிரசாரம்

சென்னை:அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, கூட்டணி கட்சியினர், பிரசாரம் செய்ய உள்ளனர்.


இடைத்தேர்தல் நடக்கும், நான்கு சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர், துணை முதல்வர் ஆகியோர், பிரசாரம் செய்து வருகின்றனர்.அதேபோல், கூட்டணி கட்சியினரும், பிரசாரம் செய்ய உள்ளனர். இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சி தலைவர் ஜவஹர் அலி, இன்று முதல், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர், என்.ஆர்.தனபாலன், நாளை முதல், பிரசாரம் செய்ய உள்ளனர்.


நடிகர்கள் பிரசாரம்:சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார், 10ல், திருப்பரங்குன்றம்; 12ல், சூலுார்; 15ல், அரவக்குறிச்சி; 16, 17ல், ஒட்டப்பிடாரம். மனித உரிமை காக்கும் கட்சியின் தலைவரும், நடிகருமான கார்த்திக், 7ல், சூலுார்; 10ல், அரவக்குறிச்சி; 12ல், திருப்பரங்குன்றம்; 13ம் தேதி ஒட்டப்பிடாரம் தொகுதிகளிலும், அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)