வாக்காளர்களுக்கு ராகுல் கடிதம்

அமேதி: அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல், தன்னை மீண்டும் தேர்வு செய்ய வேணடும் எனக்கூறி, வாக்காளர்களுக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.


காங்கிரஸ் தலைவர் ராகுல், அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு அவரை எதிர்த்து பா.ஜ., சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். ராகுல், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில் வரும் மே 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.


இந்நிலையில், அமேதி தொகுதி வாக்காளர்களுக்கு ராகுல், இந்தி மொழியில் எழுதியுள்ள கடிதம்: அமேதி தான் எனது குடும்பம். எனது அமேதி குடும்பம் தான் , உண்மை பக்கம் நிற்கவும், ஏழைகளின் வேதனையை கேட்கவும், மக்களின் குரல்களை எடுக்குவதை எதிர்க்கவும், அனைவருக்கும் நீதி கிடைக்க உறுதியேற்கவும் பலத்தை கொடுக்கிறது. நீங்கள் அளித்த அன்பின் அடிப்படையில், நாட்டின் வடக்கு முதல் தெற்கு, கிழக்கு முதல் மேற்கு வரை ஒற்றுமைபடுத்த முயற்சி செய்து வருகிறேன். மத்தியில், காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும், தொகுதியில், பா.ஜ., அரசால் முடக்கப்பட்ட திட்டங்களை முழு வேகத்துடன் செயல்படுத்துவேன் என உறுதி அளிக்கிறேன்.


ஒரு பக்கம், 'கர்மபூமி' அமேதியிலிருந்து எழும் குரல், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், சிறு வணிகர்களுக்காக உழைக்க வேண்டும் என சொல்கிறது. மறுபுறம் பா.ஜ., தரப்பிலிருந்து எழும் குரல், 15 - 20 தொழிலதிபர்களின் கைகளில் அரசு இருக்க வேண்டும் என சொல்கிறது. அமேதியில் எழும் குரல் இந்தியா முழுவதும எதிரொலிக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ.,வின் அநீதிக்கு எதிராகவும், உண்மைக்கு ஆதரவாகவும் நாடு நிற்கிறது. இங்கு பா.ஜ., பொய் தொழிற்சாலையை ஆரம்பித்துள்ளது. வாக்காளர்களை கவர அதிகளவு பணத்தை பயன்படுத்துகிறது. அமேதி மக்கள் இந்த சதியில் விழ மாட்டார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)