வாரணாசியில் மோடியை எதிர்த்த சமாஜ்வாதி வேட்பாளர் மனு நிராகரிப்பு

வாரணாசி : வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் தேஜ் பகதூர் யாதவின் வேட்புமனுவை தேர்தல் கமிஷன் நிராகரித்துள்ளது. உ.பி.,யில் மெகா கூட்டணியாக கருதப்படும் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இது குறித்து தேஜ் பகதூர் யாதவ் கூறுகையில், அதிகாரிகள் சில ஆவணங்களை எங்களிடம் கேட்டிருந்தனர். அதனை அளித்தும் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்றார்.


அவரது வழக்கறிஞர் கூறுகையில், எங்களிடம் கேட்ட ஆவணங்களை அளித்து விட்டோம். இருப்பினும் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளோம் என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)