மேற்கு வங்கத்தில் பணம் தான் பிரதானம்

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேற்கு வங்கத்தில் பணமே பிரதான பிரசார அம்சமாக மாறியுள்ளது. இதற்கு முன் இது போன்ற நிலைமை இல்லை; இப்போது தான் இவ்வாறு மாறியுள்ளது.

மாநில முதல்வர் திரிணமுல் காங்கிரசை சேர்ந்த மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரங்களில் 'பா.ஜ.விடம் கணக்கில் இல்லாத பணம் ஏராளமாக உள்ளது. அதனால் அந்த பணத்தை வாரி இறைத்து பிரசாரம் மேற்கொள்கிறது' என்றார். கான்டி லோக்சபா தொகுதியில் பிரசாரம் செய்த அவர் 'மோடியின் ஒவ்வொரு பிரசார கூட்டத்திற்கும் ஒரு கோடி ரூபாயை பா.ஜ. செலவழிக்கிறது' என்றார்.

ஆளும் திரிணமுல் அரசு இயந்திரத்தை பயன்படுத்தி பிரமாண்ட கூட்டங்களை கூட்டி விடுகிறது. அது போல பா.ஜ.வும் மெகா கூட்டங்களை கூட்டி பலத்தை காண்பிக்கிறது. ஆனால் காங். மற்றும் கம்யூ.க்கள் தான் அமுக்கி வாசிக்கின்றன. தங்களிடம் பணம் இல்லாதது போல எளிமையான கூட்டங்களை நடத்துகின்றன. மம்தா போலவே காங்கிரசும் பா.ஜ. பணம் மீது கண் வைக்கிறது. 'பா.ஜ.வுக்கு பணம் வந்து குவிகிறது. அந்த வழிகளை ஆராய வேண்டும்; முறைகேடான பண பரிவர்த்தனைகளை தடுக்க வேண்டும்' என்கிறது.

- சாந்தனு பானர்ஜி -
சிறப்பு செய்தியாளர்



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)