பதவிக்காக அலையும் அதிகாரிகள்

புதுடில்லி: எந்த கட்சி ஆட்சி அமைக்கப் போகிறது, அடுத்த பிரதமர் யார், என்பதையெல்லாம் அறிய, அனைவரும், தேர்தல்முடிவு வெளியாகும், மே, 23ம் தேதிக்காக, ஆவலோடு காத்திருக்கின்றனர்.


ஆனால், டில்லியில், மத்திய அரசின் முக்கிய பதவிகளில் உள்ள அதிகாரிகள், யார் ஆட்சிக்கு வந்தாலும், தங்களுக்கு, பசையான பதவி கிடைக்க வேண்டும் என்பதில், முனைப்பாக உள்ளனர். குறிப்பாக, வெளியுறவுத் துறை செயலர் பதவியை பிடிப்பதில் தான், கடும் போட்டி நிலவுகிறது. தற்போது, வெளியுறவுத் துறை செயலராக இருப்பவர், விஜய் கோகலே. அடுத்த ஆண்டு, ஜனவரியில், இவருடைய பதவிக்காலம் முடிகிறது.ஆனால், இப்போதிருந்தே, இந்த பதவிக்கு, போட்டி ஆரம்பித்துவிட்டது. இந்த பதவிக்கு வர, சில நிபந்தனைகள் உண்டு. குறைந்த பட்சம், மூன்று நாடுகளில், துாதுவராக பணியாற்றியிருக்க வேண்டும். அதோடு, குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரது, வெளிநாட்டு பயணங்களை, நிர்வகித்திருக்க வேண்டும்.

பா.ஜ., கூட்டணி, மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அருண் ஜெட்லியை பிடித்தால் போதும், இந்த பதவி கிடைத்துவிடும் என்கின்றனர் சில அதிகாரிகள். இப்போது, நிதி அமைச்சராக இருக்கும் அவர், அடுத்த ஆட்சியில், வெளியுறவுத்துறை அமைச்சராக, வர வாய்ப்புள்ளது எனவும், அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.



ஒரு வேளை, காங்., கூட்டணி, ஆட்சி அமைத்தால், காங்., தலைவர், ஆனந்த் சர்மா வெளியுறவுத்துறை அமைச்சராக வாய்ப்புள்ளது எனக் கூறி, அவரை வளைக்கலாமா என, சில அதிகாரிகள் யோசிக்கின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)