பெரோஸ்பூர் தொகுதியில் துக்ளக் தர்பார்

பஞ்சாப் மாநிலத்தில், 13 லோக்சபா தொகுதிகள், கடைசி கட்டமாக மே, 19 ல் தேர்தலை சந்திக்கின்றன. அவற்றில் அனைவரும் கவனமும் பெரோஸ்பூர் தொகுதி மீதே. காரணம், அந்த மாநிலத்தின் ஆளும் கட்சியாக பல முறை இருந்துள்ள, சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் தற்போதைய தலைவரும், முன்னாள் தலைவரும், இந்த தொகுதியில் மோதுவதுதான்.கிண்டலாக ஆட்சி நிர்வாகத்திற்கு துக்ளக் தர்பார் என்பர். அந்த பெயருக்கு காரணமான, டில்லி சுல்தான் துக்ளக், நிர்மாணித்த நகரம் தான் இது. அவரின் பெயரான, பெரோஸ்ஷா துக்ளக் என்பதன் முதல் வார்த்தையை அடிப்படையாக வைத்து, இந்த நகருக்கு பெயரிடப்பட்டது. வரலாற்று புகழ்பெற்ற இந்த நகரத்திற்கு, பத்து வாயில்கள் உண்டு.

வாரி இறைத்தார்இந்த தொகுதியில், சிரோன்மணி அகாலி தளம், தொடர்ந்து, ஐந்து முறை வென்றுள்ளது. அதன் முன்னாள் தலைவரும், இப்போதைய, எம்.பி.,யுமான ஷெர் சிங் குபாயா,10 ஆண்டுகளுக்கு இந்த தொகுதியைதன் வசம் வைத்திருந்தார்.அகாலிதளம் கட்சியின் கோட்டையாக,25 ஆண்டுகளுக்கும் மேலாக விளங்கும்இங்கு, இந்த முறை, அக்கட்சி வெல்லுமா என்பதே, மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. சுக்பிர் சிங் பாதலின் வெற்றி இங்கு எளிதல்ல என்பது, சமீபத்திய நிகழ்வுகளால் புலனாகிறது. எனினும், அவர் இந்த தொகுதிக்கு ஏராளமாக செய்துள்ளார். இந்த லோக்சபா தொகுதிக்குள் அடங்கிய சட்டசபை தொகுதியான ஜலாலாபாதில், 2009 ல் வெற்றி பெற்று, வளர்ச்சி திட்டங்களுக்கு ஏராளமாக வாரி இறைத்தார்.
ஆனால், இந்த முறை, மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்துள்ளது, அகாலி தளத்திற்கு சற்று பின்னடைவாக கருதப்படுகிறது. மத்தியில் ஆளும், பா.ஜ.,வுடன், நீண்ட கால கூட்டணி கட்சியான, சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் முன்னாள் தலைவரான, ஷெர் சிங் குபாயா, இப்போதைய தலைமையான, பாதல் குடும்பத்தினருடன் கொண்ட மோதலால் காங்கிரசில் இணைந்துள்ளார்.அவர், இந்த தொகுதியில் சுக்பிர் சிங் பாதலை எதிர்கொள்கிறார்.

அரசியல் வினோதம்இந்த தொகுதியின் தற்போதைய எம்.பி.,யான அவர், 2014 தேர்தலில், காங்கிரசின், சுனில் ஜாக்கரை தோற்கடித்தார். அதற்கு முன், 2009 ல், காங்கிரசின் ஜக்மீத் சிங் பிராரை, மண்ணை கவ்வ வைத்தார். அவர் இப்போது, காங்கிரசில் சேர்ந்து, தான் முன்னர் தலைவராக இருந்த சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் தற்போதைய தலைவர் சுக்பிர் சிங் பாதலை எதிர்கொள்வது, அரசியல் வினோதம் தான்!

இந்த தொகுதியில் சுக்பிருக்கு நல்ல செல்வாக்கு இருப்பது போல, குபாயாவுக்கும் இருக்கிறது. 10 ஆண்டுகள் எம்.பி.,யாக இருந்ததால், அதிருப்தியும் அதிகம் உள்ளது. அதுபோல , காங்கிரஸ் தலைவர்களை, 10 ஆண்டுகளாக எதிர்த்து அரசியல் செய்து, இப்போது அந்த கட்சி சார்பில் போட்டியிடுவது, அவருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.ராய் என்ற சீக்கிய பிரிவை சேர்ந்தவர், குபாயா. இந்த பகுதியில், அந்த பிரிவினர், அதிகம் உள்ளனர். அதனால், அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்கின்றனர்.


எனினும், ஓட்டுப்பதிவு நடந்த நான்கு நாட்களுக்குள், 23ல் தேர்தல் முடிவை அறியும் 59 தொகுதிகளில், இதுவும் ஒன்று, என்பது சிறப்பு. எனவே பெரோஸ்பூரில் யார் வெற்றி பெறுவார் என்பது, ஓட்டுப்பதிவு நடந்த அடுத்த நான்கு நாட்களில் தெரிந்துவிடும்.

கேப்டன் உத்தரவு: அலுறும் காங்கிரஸ்!கடைசி கட்டமாக, மே 19 ல் லோக்சபா தேர்தலை சந்திக்கும் மொத்தம், 13 தொகுதிகளை கொண்ட பஞ்சாபில், ஆளும் , காங்., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்கள், முதல்வர், அம்ரீந்தர் சிங்கின் அதிரடி உத்தரவால் கலங்கி போயுள்ளனர்.
'வரவிருக்கும் லோக்சபா தேர்தலில், அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த, மாநில அமைச்சர்கள் சிறப்பாக செயல்பட்டு கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். சோம்பேறியாக இருந்தால், அமைச்சர் பதவி பறிக்கப்படும்' என உத்தரவிட்டுள்ளார்.
அதுபோல, 'தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள், லோக்சபா தேர்தலில் உள்ளடி வேலையில் ஈடுபட்டால், அடுத்த முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது' எனவும் கறாராக கூறியுள்ளார்.
இதனால்,காங்கிரசார் பம்பரம் போல சுழன்று பணியாற்றுகின்றனர். மேலும், வாரியம், கழகங்களின் தலைவர்களுக்கும், இதுபோல உத்தரவிட்டுள்ளார் கேப்டன்.
-ஸ்மிருதி சர்மா -

சிறப்பு செய்தியாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)