ஓட்டு எண்ணிக்கை மையத்தில் பெண் அதிகாரி: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரி மனு

சென்னை:
மதுரையில், மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில், பெண் அதிகாரி மற்றும் ஊழியர்கள் நுழைந்த விவகாரம் குறித்து, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில், 38 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல், 18ம் தேதி நடந்தது. மதுரை லோக்சபா தொகுதிக்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள், ஓட்டு எண்ணிக்கை நடக்கவுள்ள, மதுரை மருத்துவ கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ளன. இயந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள அறைகளுக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.இந்நிலையில், மையத்துக்குள் அனுமதியின்றி நுழைந்ததற்காக, தாசில்தார் சம்பூர்ணம், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில், மதுரை லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட, மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர், வெங்கடேசன் தாக்கல் செய்த மனு:கூடுதல் பாதுகாப்பு உள்ள மையத்தில், ஆவணங்கள் இருக்கும் அறைக்குள், சட்டவிரோதமாக தாசில்தார் சம்பூர்ணம் நுழைந்துள்ளார். அவருடன், மதுரை மாநகராட்சி ஊழியர்கள் மூன்று பேர் சென்றுள்ளனர். அங்கு, மூன்று மணி நேரம் இருந்ததற்கான காரணம் என்ன என்பது, அவர்களுக்கு தான் தெரியும்.மூன்று மணி நேரத்துக்கு பிறகே, அவர்கள் இருப்பதை, போலீசார் கவனித்துள்ளனர். உயர் அதிகாரிகள் தலையீட்டால், அவர்களை விட்டு விட்டனர். பாதுகாப்பில் ஈடுபட்டிருப்பவர்களின் நடத்தை, சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆவணங்கள் இருக்கும் அறைக்கு, அனுமதியின்றி சட்டவிரோதமாக நுழைந்தது விதி மீறல்.இந்த சம்பவத்துக்கு, தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான, நடராஜன் தான் பொறுப்பு. ஓட்டு எண்ணிக்கை மைய பாதுகாப்பில் குறைபாடு உள்ளது. ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுமாறு, அதிகாரிகள் கூட்டு சேர்ந்து, அறிவுறுத்தி இருக்கலாம். இந்தப் பிரச்னையை, தேர்தல் ஆணையம் கையாண்ட விதம், சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.முறையான நடவடிக்கையை, தேர்தல் ஆணையமும் எடுக்கவில்லை. எனவே, முதன்மை செயலர், அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியின் தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.கலெக்டரை இடமாற்றம் செய்யவும், ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்துக்கு, மூன்று அடுக்கு பாதுகாப்பு வழங்கவும், தபால் ஓட்டுகளை எண்ண, ஐ.ஏ.எஸ்., அதிகாரியை சிறப்பு பார்வையாளராக நியமிக்கவும், உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.முன்னதாக, நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், மூத்த வழக்கறிஞர், என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, மனுவை அவசரமாக விசாரிக்க கோரினார். மனுவை, இன்று விசாரிப்பதாக, நீதிபதிகள் தெரிவித்தனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)