மோடி வென்றால் ராகுல் தான் பொறுப்பு : கெஜ்ரி

புதுடில்லி : மோடியும், பா.ஜ., தலைவர் அமித்ஷாவும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதற்கு ராகுல் ஒருவர் மட்டும் தான் பொறுப்பு என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என டில்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
ஆம்ஆத்மி கட்சியின் லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கூட்டாக வெளியிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், காங்., தலைவர் ராகுலை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் பேசுகையில், கூட்டணிக்கு வராமல் கெஜ்ரிவால் மீண்டும் யூ டெர்ன் செய்துள்ளார் ராகுல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ராகுலிடம் கேட்கிறேன், எந்த கூட்டணி டுவிட்டரில் உருவானது?

கடந்த 2 மாதங்களாக நாங்கள் கூட்டணி அமைக்க முயற்சித்தோம். ஆனால் அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மோடியும், பா.ஜ., தலைவர் அமித்ஷாவும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதற்கு ராகுல் ஒருவர் மட்டும் தான் பொறுப்பு என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பதற்கான முக்கியமான தேர்தல் என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)