மூன்றாம் கட்டத்தில் 65 சத ஓட்டுப்பதிவு: மேற்கு வங்கத்தில் ஒருவர் அடித்துக் கொலை

புதுடில்லி, லோக்சபாவுக்கு, நேற்று நடந்த, மூன்றாவது கட்டத் தேர்தலில், 64.66 சதவீத வாக்குகள் பதிவாயின. ஓட்டுப் பதிவு, பொது வாக அமைதியாக நடந்தது. பல மாநிலங்களில், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் சரியாக இயங்கவில்லை என்ற புகார் எழுந்தது. மேற்கு வங்கத்தில், ஒருவர் அடித்துக் கொல்லப் பட்டார்.லோக்சபாவுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டத்தில், 91 தொகுதி களுக்கு நடந்த தேர்தலில், 69.43 சதவீத ஓட்டுப் பதிவானது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த இரண்டாம் கட்டத் தேர்தலில், 95 தொகுதிகளில், 67.6சதவீத ஓட்டுகள் பதிவாயின.

குஜராத், கேரளா உள்பட, 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 116 தொகுதி களுக்கு, நேற்று, ஓட்டுப் பதிவு நடந்தது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் தொகுதிக்கு, மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது; நேற்று முதல் கட்ட ஓட்டுப் பதிவு நடந்தது. விறுவிறுப்பாக நடந்த,3-ம் கட்டத் தேர்தலில்,,
64.66 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அனந்த் நாத் தொகுதியில், 13.61 சதவீத ஓட்டுகள் பதிவாயின.

பா.ஜ., தலைவர் அமித் ஷா போட்டியிடும், காந்தி நகர் தொகுதி உள்ள குஜராத்தில், 58.96 சதவீத ஓட்டுகள் பதிவாயின. பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, காங்., மூத்த தலைவர், அஹமது படேல், குஜராத்தில் ஓட்டு அளித்தனர்.

காங்., தலைவர், ராகுல் போட்டியிடும் வயநாடு தொகுதி உள்ள கேரளாவில், 70.28 சதவீத ஓட்டுகள் பதிவாயின.மூன்றாம் கட்டத் தேர்தல், பொதுவாக அமைதியாக நடந்தது.பெரும்பாலான மாநிலங் களில், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், சரியாக வேலை செய்ய வில்லை என்ற புகார், காலையில் இருந்தது.


மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஓட்டு பதிவு தொடர்ந்தது. மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் லோக்சபா தொகுதிக்குட் பட்ட ஒரு ஓட்டுச் சாவடி யில், காங்., ,யே மோதல்ஏற்பட்டது. இதில், காங்.,கைச் சேர்ந்த, தியாருல் ஷேக், 52, கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.


பல்லார்கட் பகுதியில் உள்ள, ஓட்டுச் சாவடிக்கு வெளியே, இரு கட்சிகளுக்கு இடையே நடந்த மோதலில், நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்ட தால்,
அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதைத் தவிர, ஜாங்கிபுர் பகுதியில், மோதலை தடுக்க, துணை ராணுவப் படையினர், தடியடி நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கேரளாவில், ஓட்டுப் பதிவு செய்வதற்காக காத்திருந்த இரண்டு பேர், மயங்கி விழுந்து உயிரிழந்ததாக, அந்த மாநிலப் போலீசார் தெரிவித்துள்ளனர். வடகரா தொகுதிக்குட்பட்ட பன்னுாரில், விஜயி என்ற, 65 வயது மூதாட்டி, மயங்கி விழுந்து, பின், மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மூன்றாம் கட்டத் தேர்தலுடன், மொத்தமுள்ள, 543 தொகுதிகளில், 302 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ளது. வரும், 29ல், நான்காம் கட்டத் தேர்தல், நடக்க உள்ளது. ஒன்பது மாநிலங் களில் உள்ள, 71 தொகுதிகளில் அன்று ஓட்டுப் பதிவு நடக்க உள்ளது. மே, 23ல், ஓட்டு எண்ணிக்கைநடக்கிறது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)