அமைச்சர், சி.எம்., நண்பர் போட்டி

ராஜஸ்தானில் மார்வார் மண்டலத்தில் உள்ள, பாலி தொகுதியில், மத்திய சட்டத் துறை இணை அமைச்சர் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, ராஜஸ்தான் முதல்வர், அசோக் கெலாட்டின் நண்பர் களத்தில் உள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், மார்வார் மண்டலத்தில், பாலி தொகுதி உள்ளது. இங்கு, ஜாட் இனத்தவர் அதிக அளவில் வசிக்கின்றனர். ராஜ்புத் இனத்தவர்கள் அடுத்த கட்டத்தில் வசிக்கின்றனர். இந்த தொகுதியில், மத்திய சட்டத் துறை இணை அமைச்சர், பி.பி.சவுத்ரி மீண்டும் போட்டியிடு கிறார். ஏற்கனவே, 2014 தேர்தலில், நான்கு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இவர், மீண்டும் போட்டியின்றி வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில், களத்தில் உள்ளார்.

இவரை எதிர்த்து, பாலி தொகுதி யின் முன்னாள், எம்.பி.,யான பத்ரி ராம் ஜகார், களத்தில் உள்ளார். இவர், ராஜஸ்தானில் ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரசின் மூத்த தலைவராவார். மேலும், முதல்வர், அசோக் கெலாட்டின் நண்பரா வார். இவரை எப்படியும் வெற்றி பெற வைக்க வேண்டும் என, காங்கிரஸ் மேலிடம், முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அமைச்சர், பி.பி.சவுத்ரி, பா.ஜ., ஆட்சியில், தன் தொகுதிக்கு ஏராளமான திட்டங்களை அமல்படுத்திஉள்ளார். குடிநீர் பிரச்னைக்கு தீர்வு, ஊரக பகுதிகளில் அதிக அளவு வங்கி கிளைகளை ஏற்படுத்துவது என, பல்வேறு பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளார். அதனால், மார்வார் மண்டல மக்கள், தன்னை முழுமையாக ஆதரிப்பர் என, உறுதியாக கூறி வருகிறார்.

- ஏ.சர்மா -
சிறப்பு செய்தியாளர்



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)