நடிகர்கள் இறக்குமதி; மம்தா கட்சி, 'பேஷ்' திட்டம்

மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக, வங்க தேசத்தைச் சேர்ந்த, இரண்டு நடிகர்கள் பிரசாரம் செய்த போது பிடிபட்டனர். அவர் களை, நாட்டை விட்டு வெளியேறுமாறு, இந்திய உள்துறை மற்றும் வெளியுறவு துறை அமைச்சகங்கள் உத்தரவிட்டு உள்ளன.

லோக்சபா தேர்தலில் இதுவரை, இரண்டு கட்ட ஓட்டு பதிவு முடிந்துள்ளது; மூன்றாம் கட்ட பதிவு இன்று நடக்க உள்ளது. மூன்றாம் கட்ட ஓட்டு பதிவு நடக்கும் இடங்களில், தேர்தல் பிரசாரம் ஓய்ந்துள்ளது. மற்ற இடங்களில், பிரசாரம் தீவிரமாக நடக்கிறது. ஏழு கட்டங்களிலும் தேர்தலை சந்திக்கும், மேற்கு வங்கத்தில், வெளிநாட்டு நடிகர்கள் பேர் வந்து, முதல்வர் மம்தா பானர்ஜியின், திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் செய்தது, இந்திய அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.

மேற்கு வங்கத்தின் எல்லை நாடான, வங்க தேசத்தை சேர்ந்த பிரபல நடிகர்களான, பிர்தவுஸ் அஹமது மற்றும் காஜி அப்துல் நுார், திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, மேற்கு வங்கத்தின் பல இடங்களில் பிரசாரம் செய்துள்ளனர். இதுகுறித்து, ஆதாரப்பூர்வமாக புகார் வந்ததால், இரண்டு நடிகர்களையும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு, மத்திய உள்துறை மற்றும் வெளியுறவு துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய அரசு வழங்கிய, 'விசா' விதிகளை, வங்க தேச நடிகர்கள் மீறி விட்டதாக, வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, நடிகர் பிர்தவுஸ் அஹமது மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனாலும், விதியை மீறிய நடிகர்கள் இருவரையும், கிரிமினல் சட்டத்தில், போலீசார் கைது செய்திருக்க வேண்டும். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், அதை செய்ய வில்லை.

'இந்தியாவில் உள்ளவர்கள், இதேபோல், வங்க தேசம் சென்று, அங்குள்ள அரசியல்வாதிகளை ஆதரித்து பிரசாரம் செய்ய முடியுமா; அப்படி செய்தால், அங்குள்ள அதிபர், ஹசீனாவின் அரசு இந்தியர்களை விட்டு விடுமா?' என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிஉள்ளனர்.

- சாந்தனு பானர்ஜி -
சிறப்பு செய்தியாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)