அமேதி மக்களுக்கு, 'ஷூ' வினியோகிப்பதா?

அமேதி : ''அமேதி மக்களுக்கு, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, 'ஷூ' வினியோகித்துள்ளார்; இது, அந்த மக்களை அவமதிக்கும் செயல்,'' என, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா, ஆவேசமாக கூறியுள்ளார்.உத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, அமேதி லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், அமேதி தொகுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, இலவசமாக, ஷு வழங்கினார்.இது துகுறித்து, அமேதியில் நேற்று பிரசாரம் செய்த, காங்., பொதுச் செயலரும், ராகுலின் சகோதரியுமான, பிரியங்கா கூறியதாவது:அமேதி மக்கள், பிச்சைக்காரர்களா... அவர்களுக்கு, இலவசமாக, ஷூ வழங்கியதன் மூலம், அந்த மக்களை, ஸ்மிருதி இரானி அவமதித்துள்ளார்.
வெளியூரில் இருந்து வந்து, அமேதி மக்களிடம் ஓட்டு பிச்சை கேட்பவர்கள் தான், பிச்சைக்காரர்கள்.அமேதி மக்களுக்கு என, சுய கவுரவம் உள்ளது. ராகுலை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான், ஸ்மிருதி இரானி, இப்படி செய்துள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)