அ.தி.மு.க., தலைமை இன்று ஆலோசனை

சென்னை : சட்டசபை இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இன்று மாலை நடக்க உள்ளது. தமிழகத்தில், காலியாக உள்ள, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலுார் சட்டசபை தொகுதிகளுக்கு, அடுத்த மாதம், 19ம் தேதி, இடைத்தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் பணி குறித்து விவாதிக்க, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இன்று மாலை, 4:00 மணிக்கு, ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.இக்கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி - துணை முதல்வர், பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் உட்பட, முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)