ஆண்களை விட பெண்கள் அதிக ஓட்டு

தமிழகத்தில் நடந்த தேர்தலில், ஆண்களை விட, பெண்கள் அதிக அளவில் ஓட்டு போட்டுள்ளனர்.

தமிழகத்தில், வேலுார் தவிர, 38 லோக்சபா தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும், ஏப்., 18ல் தேர்தல் நடந்தது. இதில் ஓட்டளிக்க, 2.88 கோடி ஆண்கள், 2.95 கோடி பெண்கள், 5,688 திருநங்கையர் என, மொத்தம், 5.84 கோடி வாக்காளர்கள், தகுதி பெற்றிருந்தனர்.தேர்தல் நடந்த, 38 தொகுதிகளில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கன்னியாகுமரி லோக்சபா தொகுதிகளில் மட்டும், பெண்களை விட, ஆண் வாக்காளர்கள் அதிகம். மற்ற தொகுதிகள் அனைத்திலும், பெண் வாக்காளர்களே அதிகம்.

ஓட்டுப்பதிவின்படி, திருவள்ளூர், வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், சேலம், திருப்பூர், கோவை ஆகிய தொகுதிகளில், பெண்களை விட, ஆண்கள் அதிகமாக, ஓட்டளித்துள்ளனர்.மீதமுள்ள, 26 தொகுதிகளில், பெண்கள் அதிக அளவில் ஓட்டளித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக, தேர்தலில், 2.07 கோடி ஆண்கள்; 2.12 கோடி பெண்கள், 1,066 திருநங்கையர் என, மொத்தம், 4.20 கோடி வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர். ஆண்களை விட, 5.69 லட்சம் பெண்கள், கூடுதலாக ஓட்டளித்துள்ளனர்.


கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், ஆண் வாக்காளர்களை விட கூடுதலாக, 99 ஆயிரத்து, 552 பெண் வாக்காளர்கள், ஓட்டளித்திருந்தனர்.அதேபோல், இடைத்தேர்தல் நடந்த, 18 சட்டசபை தொகுதிகளில், ஓசூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், சாத்துார் ஆகிய தொகுதிகளில் மட்டும், ஆண் வாக்காளர்கள் அதிகம்.இதில், பூந்தமல்லி, பெரம்பூர், சோளிங்கர், ஓசூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் மட்டும், ஆண்கள் அதிகமாக ஓட்டளித்துள்ளனர்.

மீதமுள்ள, 13 தொகுதிகளில், ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்களே அதிகளவில் ஓட்டளித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக, ஆண்களை விட, 62 ஆயிரத்து, 213 பெண் வாக்காளர்கள், கூடுதலாக ஓட்டளித்துள்ளனர்.இம்முறை அதிக அளவில், பெண்கள் ஓட்டளித்திருப்பது, எந்த கட்சிக்கு சாதகமாக இருக்கும்; எந்த கட்சிக்கு பாதகமாக இருக்கும் என்று, கணிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் கலக்கத்தில் உள்ளன.

- நமது நிருபர் -


Sridhar Rengarajan - Trichy,இந்தியா
21-ஏப்-2019 13:52 Report Abuse
Sridhar Rengarajan 70 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகி இருப்பதாலும், பெண்கள் வாக்குகள் அதிகம் பதிவாகி இருப்பதாலும் அதிமுக பாஜக பாமக திமுக தேமுதிக தமாகா புதிய தமிழகம் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். இதுவரை பெரிதாக இல்லாத ஒரு விஷயம் இப்பொது அமைதியாக நடந்திருக்கிறது. அது ஹிந்துக்கள் விழித்துக்கொண்டது. இனி மைனாரிட்டி பருப்பு தமிழ்நாட்டில் வேகாது.
Chowkidar N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
21-ஏப்-2019 13:27 Report Abuse
Chowkidar N.Purushothaman பெண்களுக்கான திட்டங்களை செயல்படுத்திய மோடிஜிக்கு தான் இந்த ஓட்டுக்கள் ...
tharmaa -  ( Posted via: Dinamalar Android App )
21-ஏப்-2019 12:12 Report Abuse
tharmaa இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை... வேலை நிமித்தமாக லட்சக்கணக்கான ஆண்கள் வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் தத்தம் குடும்பங்களைப் பிரிந்து செல்லும் தோழர்களால் இந்த வித்தியாசம் ஏற்படுகிறது.
Young Prince - Bangalore,இந்தியா
21-ஏப்-2019 19:11Report Abuse
Young Princeபாரா துறைக்கு எல்லாம் தெரிஞ்சியிருக்கு...
tharman -  ( Posted via: Dinamalar Android App )
21-ஏப்-2019 12:09 Report Abuse
tharman இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை...
21-ஏப்-2019 12:09 Report Abuse
தருமன் இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை...
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
21-ஏப்-2019 11:45 Report Abuse
Dr. Suriya அட நீங்க வேற, பெண்கள் எல்லாம் இலவசம், லோன் தள்ளுபடின்னு காங்கிரஸ் , தி மு க கூட்டணிக்கு ஓட்டு போட்டாங்கய்யா போட்டாங்க
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
21-ஏப்-2019 11:17 Report Abuse
அசோக்ராஜ் சுடாலினுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் செய்திகளாகவே போடுகிறீர்கள். ஒரு மாறுதலுக்கு, பகுத்தறிவு பகலவன் பெரியார் மண்ணில் பகுத்தறிவு அல்லவன் வீரமணி பக்தர்கள், பெருவாரியாக திமுகவுக்கு வாக்களித்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்று போடுங்கள்.
nehru - ,
21-ஏப்-2019 12:13Report Abuse
nehruசரி செஞ்சிக்க.....
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
21-ஏப்-2019 08:20 Report Abuse
Natarajan Ramanathan என்றுமே பெண்கள் தீமுகவுக்கு எதிரிதான் இதை தீமுகவினரே ஒத்துக்கொள்வார்கள். இப்போது இறை நம்பிக்கையை வேறு பழித்துள்ளனர். எனவே கண்டிப்பாக திமுக தோல்வி அடையவே வாய்ப்பு உள்ளது.
Bhaskaran - Chennai,இந்தியா
21-ஏப்-2019 07:18 Report Abuse
Bhaskaran ஜெ இருக்கும்போது பெண்கள் அவருக்கு அமோகமாக வாக்களித்தனர் இப்போது யாருக்களித்திருக்கின்றனரோ இறைவனுக்குத்தான் தெரியும்
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
21-ஏப்-2019 17:51Report Abuse
uthappaஇறைவனை நம்பும் கட்சிக்குத்தான் இருக்கும்....
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)