வாக்காளர்களுக்கு ராமதாஸ் நன்றி

சென்னை, மத்தியிலும், மாநிலத்திலும், நல்லாட்சிகள் தொடர வாக்களித்த மக்களுக்கு, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தின், 38 லோக்சபா தொகுதிகளிலும், 70.90 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. அனைத்து ஓட்டுச்சாவடிகளில் இருந்தும், துல்லியமாக ஓட்டுப்பதிவு விபரம் கிடைக்கும்போது, இந்த எண்ணிக்கை அதிகரிக்க, வாய்ப்புகள் உள்ளன.பணத்தை வாரி இறைத்து, ஓட்டுகளை வாங்குவது, வன்முறைகளை நடத்தி, மக்களை அச்சுறுத்தி, அதன் வழியே களச்சூழலை தங்களுக்கு சாதகமாக மாற்றுவது, எதிர்க்கட்சி கூட்டணியின் வழக்கம்.

இந்த முறையும், அத்தகைய செயல்களை கட்டவிழ்த்து விட்டாலும், அவற்றால் மக்களின் மன உறுதியை, அசைத்துக் கூட பார்க்க முடியவில்லை.மத்தியிலும், மாநிலத்திலும், தற்போது நடந்து வரும், நல்லாட்சிகள் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில், மக்கள் திரண்டு, அ.தி.மு.க., கூட்டணிக்கு, ஓட்டு போட்டுள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

அரியலுார், ஆம்பூர் உள்ளிட்ட, சில இடங்களில், எதிர்க்கட்சியினர், வன்முறையை கட்டவிழ்த்து விட்டாலும், அவை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. சட்டம் - ஒழுங்கும், பொது அமைதியும் பாதிக்கப்படாமல் இருந்ததை உறுதி செய்த, தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறைப் பணி பாராட்டத்தக்கது.அ.தி.மு.க., தலைமையிலான அணி வேட்பாளர்களுக்கு களப் பணியாற்றிய, அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும், ஆதரவு தந்த அமைப்புகளுக்கும், பா.ம.க., சார்பில், நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)