24 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மேடையில் மாயாவதி - முலாயம்

லக்னோ: 24 ஆண்டுகளுக்கு பிறகு , சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் முலாயம் சிங், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் ஒரே மேடையில் தோன்றினர். இங்கு, முலாயம் சிங்கிற்கு ஆதரவாக மாயாவதி பிரசாரம் செய்தார்.

24 ஆண்டுகளுக்கு முன்பு, முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாதி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை மாயாவதி திரும்ப பெற்று கொண்டார். இதனால், அரசு கவிழ்ந்தது. கோபமடைந்த சமாஜ்வாதி தொண்டர்கள், விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியை தாக்கினர். இதன் பின்னர் முலாயமும், மாயாவதியும் எதிர்த்து அரசியல் செய்து வந்தனர். ஒரே அணியில் இடம்பெற்றது இல்லை.


இந்த முறை லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. முலாயம் சிங், சமாஜ்வாதி சார்பில் மெயின்புரி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக மெயின்புரி தொகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் முலாயமும், மாயாவதியும் 24 ஆண்டுகளுக்கு பின் ஒரே மேடையில் ஏறினர். இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர், கூட்டத்தில் ஒருவரை ஒருவர் புகழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் சமாஜ்வாதி தலைவர் அகிலேசும் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் மாயாவதி பேசியதாவது: பிரதமர் போல், முலாயம் போலியான பிற்படுத்தப்பட்ட தலைவர் அல்ல. சில நேரங்களில் நாட்டின் நலன் கருதி சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் முலாயம் மாறியுள்ளார். சமாஜ்வாதி ஆட்சியின்போது, பெண்கள் உட்பட பொது மக்களின் நலனுக்காக பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளார் என்றார்.

முலாயம் பேசியதாவது: மாயாவதியை நாங்கள் வரவேற்கிறோம். அவருக்கு நான் எப்போதும் மரியாதை அளித்துள்ளேன். கட்சியினரும் மாயாவதிக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)