மாற்றி ஓட்டு; விரலுக்கு வெட்டு

லக்னோ: லோக்சபா தேர்தலில், தவறுதலாக பா.ஜ., வேட்பாளருக்கு ஓட்டு போட்ட பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவாளர் ஒருவர், தனது விரல்களை அறுத்து கொண்டார்.

உ.பி.,யில் பா.ஜ., தனித்து போட்டியிடுகிறது. பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ராஷ்ட்ரிய லோக்தள் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இரண்டாம் கட்டமாக நேற்று அங்கு தேர்தல் நடந்தது. புலன்த்ஷார் தொகுதியில் சிட்டிங் பா.ஜ., எம்.பி., போலோ சிங்கும், பகுஜன் சமாஜ் கூட்டணி சார்பில் யோகேஷ் வர்மாவும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், அந்த தொகுதிக்கு உட்பட்ட ஷிகார்புராவின் அப்துல்லாபுர் ஹூலசன் கிராமத்தை சேர்ந்தவர் பவன்குமார் (25). பகுஜன் சமாஜ் கட்சி தீவிர ஆதரவாளர். நேற்று ந டந்த தேர்தலில், தவறுதலாக பா.ஜ.,வுக்கு ஓட்டளித்து விட்டார். அதிர்ச்சியடைந்த அவர், வீட்டிற்கு திரும்பியதும், தனது கைவிரலை , கத்தியால் அறுத்து கொண்டார். இது குறித்து டுவிட்டரிலும் வெளியிட்டார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)