இப்படியும் ஒரு வேட்பாளர்

பீஹாரில் போட்டியிடும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வேட்பாளர், 'ஒரு காசு கூட சொத்து இல்லை; கடனும் இல்லை' என்று, வேட்பு மனுவில் கூறியுள்ளார். மேலும், அவர் மீது வழக்கும் இல்லை.

பீஹாரில் இருந்து பிரித்து, 2000 ஆண்டில் அமைக்கப்பட்டது, ஜார்க்கண்ட் மாநிலம். இந்த மாநிலத்தைச் சேர்ந்த, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, பீஹாரின், 40 தொகுதிகளில், ஐந்து தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தக் கட்சியைச் சேர்ந்த, பாங்கா தொகுதியில் போட்டியிடும், ராஜ் கிஷோர் பிரசாத், 17 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக கூறியுள்ளார். புர்னியா தொகுதியில் போட்டியிடும், மஞ்சு முர்மு, 3 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக கூறியுள்ளார்.

அதே நேரத்தில், கிஷண்கஞ்ச் தொகுதியில் போட்டியிடும், ஷகுல் முர்மு, 50, தனக்கு எந்த சொத்தும் இல்லை, கடனும் இல்லை என்று, வேட்பு மனுவில் கூறியுள்ளார். மேலும், தன் மீது எந்த வழக்கும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த இவர், சமூக சேவகராக உள்ளார். 'மற்றவர்களின் உதவியுடன் தான், தேர்தலை சந்திக்கிறேன்' என, ஷகுல் முர்மு கூறியுள்ளார். பங்கா தொகுதியில் சுயேச்சையாக போட்டி யிடும், சஞ்சீவ் குமார் குணால் என்பவரும், தனக்கு எந்த சொத்தும் இல்லை என, தெரிவித்துள்ளார்.

- நமது நிருபர் -வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)