மரமா... மக்கள் பிரதிநிதியா...?

ஓட்டுப்பதிவை மையப்படுத்தி, மரம் வளர்ப்பிற்காக, சமூக வலைதளங்களில், மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வு பிரசாரம்.

ஓட்டுப்பதிவை மையப்படுத்தி, மரம் வளர்ப்பிற்கான விழிப்புணர்வு பிரசாரம், சமூக வலைதளங்களில், ஐந்து ஆண்டு, 'சேலஞ்ச்' ஆக பரவுகிறது.இந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தில், சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகமாக உள்ளது.கட்சி தலைவர்களின் முரணான நிலைப்பாடுகளை வெளிச்சம் போட்டு காட்டும், பழைய பேட்டிகளின், 'வீடியோ'க்கள் அதிகளவில் பகிரப்படுகின்றன.

'மீம்ஸ்'கள், சிரிப்புடன், சிந்தனையை துாண்டும் விதமாக உள்ளன.மரம் வளர்க்கும் விழிப்புணர்வு பிரசாரத்திற்கு, இந்த சந்தர்ப்பத்தை, இயற்கை ஆர்வலர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதில், 'ஓட்டு போட்டு வீட்டிற்கு வந்தபின் ஒரு மரம் நடுங்கள்...! ஐந்து ஆண்டுகளுக்கு பின், யார் நமக்கு அதிகமான பலன் கொடுத்தது என்று பாருங்கள்...! மரமா... மக்கள் பிரதிநிதியா...!' என்ற, 'ஸ்டேட்டஸ்' அதிகம் பரப்பப்படுகிறது.

தற்போது நிலவும் வெயிலின் கொடுமையை குறைக்க, வீடுதோறும் மரம் வளர்க்க, இந்த ஐந்து ஆண்டு, 'சேலஞ்ச்' கை கொடுக்குமா, என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)