'நான் தி.மு.க., தாம்பா... ஆனா, ரெட்ட இலைக்கு ஓட்டு'

தேனி லோக்சபா தொகுதியில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார், அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிடுகிறார். இத்தொகுதியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என, பணத்தை தண்ணீராய் வாரி செலவழித்து வருகின்றனர்.

பிரசாரத்திலும் சரி, அதற்காக, வி.ஐ.பி.,க் களை அழைத்து வருவதிலும் சரி, அ.தி.மு.க., முன்னிலையிலேயே உள்ளது. இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் விஷயத்திலும், முன்னிலையில் உள்ளனர்.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியில், அதிக ஈடுபாடு உள்ளவர்கள் தவிர, மற்ற வாக்காளர்களுக்கு, தலா, 1,000 ரூபாய், அ.தி.மு.க, தரப்பில் வழங்கி வருகின்றனர். இது, தி.மு.க.,வை சேர்ந்த பல தொண்டர்களை புலம்பச் செய்து உள்ளது.

'ஏம்பா... நான், தி.மு.க., தாம்பா. ஆனா... ரெட்ட இலைக்குதாம்பா ஓட்டு. அந்த, 1,000 ரூபாயை கொடுத்துட்டு போங்கப்பா' என, பலரது வீடுகளிலும் குரல் ஒலித்து வருகிறது. இந்நிலையில், தற்போது, தி.மு.க.,வைச் சேர்ந்தவர்களும், ஒரு ஓட்டுக்கு, 500 ரூபாய் பட்டுவாடா செய்கின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)