அன்புமணி சவால்

தி.மு.க., கூட்டணியில் மது ஆலை அதிபர்கள், பணக்காரர்கள், பண முதலைகள் மட்டுமே உள்ளனர். அராஜகம், வழிப்பறி, பெண் கடத்தல், கட்ட பஞ்சாயத்து ஆகியவை தான் அவர்கள் கூட்டணி. தி.மு.க.,வினர் பிரியாணி கடையில் சண்டை, பியூட்டி பார்லர் பெண் வயிற்றில் உதைப்பது, மொபைல் போனை எடுத்துக்கொண்டு ஓடுவது, ஓட்டலில் குத்துச்சண்டை போடுவதைத் தான் செய்கின்றனர்.

எங்களின் எல்லா வேட்பாளர்களையும், கூட்டணிக் கட்சிதலைவர்களின் ஆசிபெற்ற வேட்பாளர் என்று அறிமுகப்படுத்த முடியும். தி.மு.க., கூட்டணியில் உள்ள, கொ.ம.தே.க., வேட்பாளரை, திருமாவளவன் ஆசி பெற்ற வேட்பாளர் என்று அறிமுகப்படுத்த, ஈஸ்வரனுக்கு தைரியம் இருக்கிறதா?ராகுல் பிரதமர் என்று ஸ்டாலின் தான் கூறுகிறார்; காங்கிரஸ் கட்சிகாரர்களே கூறுவதில்லை. அதேபோல், ஸ்டாலின் அடுத்த முதல்வர் என்று ராகுல் தான் கூறுகிறார்; ஆனால், அடுத்த ஜென்மத்தில் கூட, ஸ்டாலினால் முதல்வர் ஆக முடியாது.

-அன்புமணி, பா.ம.க., இளைஞர் அணி தலைவர், சேலம், ராசிபுரத்தில்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)